பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/194

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

184 சீர்திருத்தச் செம்மல்

வாய்ந்தவர். மாதம் இருமுறை வந்து பார்த்துச் செல்லுவார். உடல் நிலையில் மாற்றம் நேர்ந்தால் தகவல் கொடுத்தால் உடன் வந்து கவனிப்பார். இப்படி ஒரு முறை டாக்டர் வந்திருந்தபோது புதல்வியாகிய என்னிடம் "அம்மா இனி அதிக நாள் இருக்க மாட்டார்கள். ஒரு மாதத்துக்குள் எதுவும் நேரலாம். இதை இன்றே அப்பாவுக்குக் கடிதம் எழுதிவிடு" என்று கூறிச் சென்றார். உடனே அதன்படி எழுதினேன்.

அந்தச் சமயம் சிங்கப்பூரில் கேஸ் விசாரணைச் சமயம், அதற்கு ஏற்பாடு செய்து வைத்து வரவேண்டும். அப்பொழுது விமானப் பிரயாணம் இல்லாத காலம். கப்பல் பயணம் 9 நாள், ரயில் பயணம் 1 நாள், ஆக வீடு வர 10 நாள் ஆகிவிடும். அதற்குள் எதுவும் நேர்ந்து விட்டால்...? என்று கருதி உறவினரில் இருவருக்கும், எனக்கும் (கொழும்பில் படித்துக் கொண்டிருந்த) என் அண்ணன் அவர் களுக்கும், உயர்திரு. சொ. முருகப்பா அவர்களுக்கும் ஒரே மாதிரியில் 'நான் அங்கு வந்து சேரு முன்பாக என் மனைவியாருக்கு ஏதும் நேர்ந்து விட்டால் வைதீக முறையில் ஏதும் செய்யக் கூடாது. நிறையப் பூக்கள் வாங்கிக் காரை அலங்காரம் செய்து, காரில் வைத்து இடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். (ஏனெனில் அப்பொழுது பங்காளிகள் கூட்டு இல்லாத நிலையன்றோ) குளிப் பாட்டி நல்ல சீலை வாங்கி, மாலைகள் அணிவிக்க வேண்டும். பந்தல் போடக் கூடாது. பிராமணரைக் கூட்டிச் சவண்டி செய்யக் கூடாது. சவண்டியன்று ஏழை எளிய மக்களுக்கு (உள்ளூர் அரிசனங் கட்கு) சாப்பாடு போடுங்கள்' என்ற முறையில் கடிதம் அல்ல உத்தரவு போட்டு எழுதி