வை. சு. சண்முகனார் 187.
தந்தையார் இயல்புகள்
தமிழ் மொழி வளர்ச்சியில் ஆர்வம் மிக்கவர் எம் தந்தையார். தமிழ்க் கவிஞர்கள், தமிழ் அறிஞர்களிடம் மிகுந்த ஈடுபாடு, பற்றுள்ளம் கொண்டவர்கள். இவர்களின் துன்பநிலை, அறிந்தால் தந்தையார் மனம் கொதித்துப் பேசுவார்கள்; மனம் நைவார்கள். இயன்ற உதவிகளை வலியச் சென்று தம் கடமை யாகக் கருதிச் செய்வார்கள். இன்ப மாளிகைக்கும், பிறகு வசித்த ஒரு பழைய வீட்டிற்கும் சித்தர்களும் வந்து செல்வ துண்டு. மதுரை அருகில் ஒருகிராமத்திலிருந்து இரண்டு சித்தர்கள், வருவதுண்டு. இவ்விருவரும் உடலில் எந்த இடத்தில் வலி ஏற்பட்டாலும் அதற்குள்ள நரம்பு களைக் கணித்து அதைப் பிடித்து நீவி விட்டு அந்த நோயை அகற்றி விடக் கூடிய ஆற்றல் படைத்தவர்கள். அவருள் ஒருவர் அதிகம் பேசிப் பார்த்ததில்லை. முகத்தில் ஒரு கடுமையான தோற்றம். நல்ல உயரமாக இருப்பார். முதல் நாள் வந்து, அன்றோ மறுநாளோ சென்று விடுவார்.
இன்னொருவர் செல்லச்சாமி என்பவர். இவர் பல் விளக்க மாட்டார். எப்பொழுதும் வாயில் வெற்றிலை, புகையிலை அடக்கி இருப்பார். யாரிடமும் ஒரு குழந்தை போலக் குழந்தைப் பேச்சாகவே பேசுவார். செட்டிநாட்டில் மிகப் பெரிய செல்வர் வீடாக இருக் கட்டும், அங்கும் சென்று இதமாக ஓரிரு வார்த்தை குழந்தை பேசுவது போலப் பேசிவிட்டு வருவார். நடுத்தர வீட்டுக்கும் வருவார். தீண்டப் படாதவர்கள் என்று அக்காலத்தில் ஒதுக்கி வைத்திருந்த சாதியினரின் வீட்டுக்கும் சென்று வருவார். ஆனால் இவர் தந்தையார் வீட்டுக்குத்தான் அதிகம் வருவார். அழுக்கு