பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/199

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வை. சு. சண்முகனார் 189.

கொண்டு வாழ்ந்த நிலையிலும் நாங்கள் கவலைப் பட்டு ஏதும் கூறினால் "இந்த நிலைமைகள் எல்லாம் நிச்சயம் நல்லபடி மாறிவிடும். உண்மைக்கு அழிவில்லை, அது வெற்றி பெற்றே தீரும். கவலைப்படுதல் முட்டாள் தனம், வாழ்க்கை நரகமாகிவிடும். இதற்கு இடம் கொடுக்கக்கூடாது" என்று பலவாறு சமாதானம் கூறி, நம்பிக்கை - தைரியத்தை எங்கட்குக் கொடுப்பார்கள்.

இன்ப மாளிகை மிகப் பெரிய வீடு. பணியாளர்களைக் கூப்பிட்டால் அவர்கட்கு கேட்காது. அதனால் மேசையில் ஒரு மணி வைத்திருப் பார்கள். அதை அழுத்தினால் மணி அடிக்கும் 1 தரம் அடித்தால், ஒரு ஆள் வரும் (சமையல் ஆள், எடு பிடி வேலையாள், டிரைவர், கணக்குப் பிள்ளை) இன்னாருக்கு இத்தனைத் தடவை மணி அடிக்கப்படும். அந்த ஆள் வரவேண்டும் என்று ஏற்கனவே பணியாளருக்கு அறிவிக்கப் பட்டிருக்கும். அதன்படி அந்த அந்த மணிக்கு ஏற்ப அவர்கள் வந்து பணியினை முடிப்பார்கள்.

பொது வாழ்வு, கேஸ் இரண்டிலுமே ஈடுபட்டு, தொழிலை நேரடியாகக் கவனிக்காது முழுதுமாக மானேஜர்கள் பொறுப்பில் பர்மாவிலும், மலேயாவிலும் விட்டதினால் வரவு சுருங்கித் தொழில் நட்டமாகிப் பொருளாதார நிலை சீர்குலைந்து போய் விட்டதினால் எடுபிடி வேலையாள் எல்லாம் போய்விட்ட நிலை. ஒரு பழைய வீட்டில் வசித்து வந்த நிலை. ஆனால் இந்த வீட்டிலும் அந்த மணியோசை எழும். 1 தடவை மணி அடித்தால் பேரன் வருவார். 2 தடவை மணியடித்தால் ஒரு பேத்தி, 3 தடவை மணி அடித்தால் மற்றொரு பேத்தி வந்து ஐயா ஏவும் வேலைகளைச் செய்து கொடுத்துவிட்டுச் செல்வார்கள்.