வை. சு. சண்முகனார் 201
அப்போதையத் தமிழ் நாட்டின் தவப்பயன், உள்ளத் துறவு பெற்ற சிறந்த வேதாந்தி, மாசு மறுவற்ற நாட்டன்பர், இணையற்ற தமிழ்த் தொண்டர், மனிதப் பிறவியில் உயர்வு தாழ்வு கூறுதல் ஐயத்துக்கு இடமில்லாத பாவமாகும் என்று துணிந்து கூறி அதன் படி வாழ்ந்து வழிகாட்டிய வீரர், மங்கையர் முன்னேற்றத்தில் மட்டிலா ஆர்வங் கொண்ட மகான் பாரதியார், மிடுக்குடன் வேகமாக எவர் நெஞ்சத்தையும் கொள்ளை கொள்ளும் வண்ணம் புரட்சிக் கருத்துக்களை உரைநடையும் பாடலுமாக நம்மிடையே கொட்டிவிட்டு 32 ஆண்டுகட்கு முன்பே நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்கள்.
புனித உள்ளங்கொண்ட நம் புலவர் ஏறு பாரதியாரிடம் நம் சங்கம் பெற்ற வாழ்த்துக்கள், நமக்குத் தோன்றும் இன்னல் களைத் தடுத்து நிறுத்தி மறுமலர்ச்சி தரும் என்பது நிரூபிக்கப் பெற்ற உண்மையாக நிலவுகிறது.
நம் கவியரசர் 6.1.20 முதல் 10.1.20 வரை மறுமுறையாகக் கானாடுகாத்தான் வந்திருந்தார்கள். நம் சங்கத்தில் அக்கவிஞரின் நிழல் படம் எடுத்து அது நம்மிடம் இருக்கிற வாய்ப்பைத் தமிழ் நாடடில் இருந்த வேறு எந்தச் சங்கமும் பெறவில்லை. பாரதியாரின் வாழ் நாளில் இரண்டு முறையே நம் பகுதிக்கு வந்தார்கள். அப்போது இரு வாழ்த்துப்பாக்கள் தான் பாடினார்கள். முதலாவது தமக்கு விருப்ப மான ஒரு தனிமனிதர் மீது. இரண்டாவது நம் இந்து மதாபிமான