வை. சு. சண்முகனார் 203
நம் குலத்தினர் 78 ஊர்களில் அப்பொழுது வசித்தனர் என்ற உண்மை அப்போதுதான் வெளிப்பட்டது.
18.8.21 அன்று கோனாபட்டில் எண்ணூற்றுக்கதிகமாக உறுப்பினர் களான தனவைசிய வாலிபர்களின் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டவர்கள் நம் தனவணிக குல அபிமானத்தில் எத்தகைய வியக்கத்தக்க ஆர்வங் காட்டினர் என்ற காட்சியை ஒரு போதும் மறக்க முடியாது.
சமயப் பற்றினால் அரசர்களால் கட்டப்பெற்ற ஆலயங்களைப் புதுப்பிக்க ஆறுகோடி ரூபாய் செலவிட்டிருக்கிறது தனவணிக சமூகம். செலவிட்டவை கழித்து, சுமார் இரண்டரைக் கோடி ரூபாய் சொத்துக்களைச் சத்திரம், மடம், விடுதி, வேத பாட சாலை, நந்தவனம், பசுமடம் போன்ற ஸ்தாபனங்களுக்கு ஒதுக்கி வைத்திருக் கிறது.
கன்னியாகுமரி முதல் காசி வரையும் அதற்கு அப்பால் நம்மவர் வாழும் வெளிநாடுகளிலும் இச்சொத்துக்கள் பரவி இருக்கின்றன.
நம் இந்து மதாபிமான சங்கம் நமது நண்பர்கள் மெ.ராம. மெ; ராய.சொ; அ.ராம.ராம; அழ. அருணாசலன்; பழ. வெங்கடாசலம் போன்ற பலரின் விடாமுயற்சியால் இன்று புத்துயிர் பெற்று நமக்கெல்லாம் பெருமகிழ்வு தந்து நிற்கிறது.
திருநாவுக்கரசர் கூறுகிறபடி,
"நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன் பொக்கம் மிக்கவர் பூவும்நீ ரும்கண்டு நக்கு நிற்பன் அவர்தமை நாணியே!"