பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/30

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

20 சீர்திருத்தச் செம்மல்

எண்சுவடி முதலானவற்றை மனப்பாடம் செய்தல் வேண்டும். மனப்பாடம் செய்யும் பழக்கத்தால் அக்கால மாணவர்கள் நல்ல நினைவாற்றல் பெற்று விளங்கினர்.

இத்திண்ணைப் பள்ளியிற் சேர்க்கப்பட்ட நம் சண்முகம் எழுது வதிலும் மனப்பாடம் செய்வதிலும் சிறந்து விளங்கினார். ஆசிரியரால் பாராட்டப் பெறும் நன்மாணாக்கராகத் திகழ்ந்தார்.

குல வழக்கம்

அக்காலச் செட்டி மக்களிடம் ஒரு வழக்கம் இருந்து வந்தது. ‘படிப்பதற்கென்று ஒரு சாதியிருக்கிறது. நம்குலத் தொழிலாகிய வட்டித் தொழில் செய்வது தான் நம் குல வழக்கம்’ என்று கருதித் திண்ணைப் பள்ளிக் கூடப் படிப் போடு நிறுத்திவிடுவர். சிறு பருவத்திலேயே இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா போன்ற கடல் கடந்த நாடுகளிலுள்ள வட்டிக் கடைகளுக்கு அனுப்பி வைப்பர்.

அக்குல வழக்கத்தின்படி நம் சண்முகத்தையும் திண்ணைப் பள்ளிப் படிப்போடு நிறுத்தி விட்டனர்.

திண்ணைப் பள்ளியளவில் சண்முகம் நிறுத்தப் பட்டாலும் சண்முகம் செட்டியார் என்றான பின்னர் ஆங்கிலத்தில் நன்கு பேசுமளவிற்கு ஆற்றல் பெற்றார். தமிழ் இலக்கியங்களிலும் ஈடுபாடு கொண்டு விளங்கினார். தன் முயற்சியாலும், சிங்கப்பூர் மலேசியா பகுதிகளில் வாழ்ந்து வந்தமையாலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் திறமை பெற்று விளங்கினார்.