வை. சு. சண்முகனார் 21
திருமணமும் குடும்பப் பொறுப்பும்
செட்டிநாட்டு வழக்கப்படி சண்முகத்துக்குப் பத்தாம் வயதி லேயே இலக்குமி (லெட்சுமி) என்னும் குலமகளாரைத் திருமணம் செய்து வைத்தனர்.
இவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கும்போது, சண்முகம் 17 அல்லது 18 வயதுற்ற நிலையில், இவர் தம் தந்தையார் வயி. சுப்பிரமணியன் செட்டியார் திடீரென இயற்கையெய்தி விட்டார். அதனால் குடும்பப் பொறுப்பு சண்முகனார் கைக்கு வந்தது. ஆயினும் பொறுப்பேற்கத்தக்க பருவம் எய்திலர்.
இச்சமயத்தில் இவர் இளைஞராயிருந்தமையால் மலேயா முதலிய ஊர்களில் நடந்து வந்த வணிகத்திற் கூட்டு வைத்திருந்த வர்கள் இவரிடம் ஒரு தொகையைக் கொடுத்துப் பங்கைப் பிரித்துக் கொண்டனர்.
சண்முகத்துக்குப் பதினெட்டு வயதாயிற்று. தக்க பருவம் அடைந்து விட்டார். வெளிநாட்டில் நடத்தி வந்த வணிகத்தில் தமக்குச் சேரவேண்டிய பங்குத் தொகை சரியாக வந்து சேர வில்லை; நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை அறிந்து கொண்டார். தமது பதினெட்டாம் வயதில் வழக்குத் தொடர்ந்தார். அன்று தொடங்கிய வழக்கு, அவர்தம் இறுதிக் காலம் வரை தீராமல் தொடர்ந்து கொண்டேயிருந்தது. இந்தியாவில் தேவகோட்டை சென்னை, தில்லி முதலிய ஊர்களிலும், மலேயாவில் மலாக்காவிலும் சிங்கப்பூரிலும் வழக்குகள் நடைபெற்றுப் பின்னர் இலண்டன் “பிரிவிக் கவுன்சில்” வரை நீடித்து நடந்தன.
ஆறிடங்களில் நடந்த வழக்குகளில் நான்கில் வெற்றித் தீர்ப்பு, ஒரே ஒருமுறை எதிர்த்தரப்புக்கு