பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/34

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

24 சீர்திருத்தச் செம்மல்

எண்ணித் துணிவது தான் அவர்தம் இயல்பு. அவ்வகையில் தாமே எண்ணி ஒரு முடிவுக்கு வருவார். பின்னர் மக்களை அழைத்து, ‘இது செய்ய எண்ணு கிறேன்; இவ்வாறு செய்ய எண்ணுகிறேன். உங்கள் கருத்தென்ன?’ என வினவுவார்.

மூத்தவராய சோலை, தமது எண்ணங்களைச் சொல்வதும் உண்டு. இளையவராகிய பார்வதி, தந்தையார் செய்வதில் தவறா இருக்க முடியும் என்று கருதி, ‘நீங்கள் சொல்வது சரிதான்’ என்று சொல்லி விடுவார்.

உடனே இவருக்குச் சினந்தோன்றிவிடும் ‘நான் சொல்வதற்குத் தலையாட்டவா உங்களிடம் கேட்டேன்? நானென்ன முற்றும் உணர்ந்தவனா? நானும் தவறு செய்து விடலாமல்லவா? நீங்கள் அதையெதிர்த்துச் சொல்லும் துணிவு பெற வேண்டும். எடுத்ததற் கெல்லாம் ‘ஆமாம் சாமி’ போடாமல் எதிர்ச்சிந்தனை செய்ய வேண்டும். அதுதான் நல்லது’ என்று கடிந்து கொள் வார்.

மனைவியார் பிரிவு

இலக்குமி ஆச்சியவர்கள் அடிக்கடி நோய்வாய்ப் படுவதுண்டு. மேற்கூறிய வழக்கின் பொருட்டு நம் சண்முகனார் அடிக்கடி சிங்கப்பூர் சென்று வருவார். இவர் ஒரு முறை சிங்கப்பூருக்குச் சென்றிருந்த பொழுது, இலக்குமி ஆச்சி அவர்கள் நோய்வாய்ப் பட்டார். குடும்ப மருத்துவர் வந்து பார்த்து விட்டு, உடனிருந்த மகள் பார்வதியிடம் “அம்மாவின் உடல் நிலை மோசமாகி வருகிறது. இருபது அல்லது முப்பது நாளுக்கு மேல் ஓடாது. இந்த விவரத்தை அப்பாவுக்கு உடனே எழுதி விடுங்கள்” என்று கூறிச் சென்றார்.