வை. சு. சண்முகனார் 33
நடத்திக்கச் சொன்னாரு. அது அந்த நேரத்திலே ரொம்பப் பெரிய உதவி.
தடபுடலா கொட்டகை போட்டோம். எதிர்ப் பாயிருந்த வங்களுக் கெல்லாம் ஒரே வயித்தெரிச்சல் மாநாட்டுக்கு இன்னும் ஒரு வாரந்தான் இருக்கு. அப்போ காரைக்குடிச் சேர்மனாயிருந்த ஏவீ.பிஎல். சிதம்பரஞ் செட்டியார், 'மாநாடா நடத்துறானுங்க மாநாடு; கொட்டகை யைத் தீ வைச்சுக் கொளுத்திட்டா என்ன செய்வானுங்க?' என்று பேசினார்."
எதிர்ப்பாளர்கள் இவ்வாறு பேச்சளவோடு நிற்கவில்லை. சுயமரியாதை மாநாட்டுக் கொட்டகைகள் பலவற்றுக்கு நெருப்பு வைத்துக் கொளுத்திய செய்திகளை நாடறியும் எரியும் நெருப்புக்கும் எறியும் கல்லுக்கும் அரிவாள் வெட்டுக்கும் சுழற்றுங் கம்புக்கும் அஞ்சாது, சுழன்று சுழன்று கருத்துப் போர் புரிந்து வந்த சுயமரியாதை வீரர்களுக்குப் பாசறையாக, ஊர்தோறும் ஓரிருவர் தம் இல்லங்களைத் தந்து உதவிய பெருமக்களும் இருக்கத் தான் செய்தனர்.
இவ்வாறு தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற் கொண்டு, போராடி வரும் வீரர்களுக்கு, களைப்பாறும் இடங்களாகக் கானாடுகாத்தானில் வயி.ச.சண்முகனாரின் 'இன்ப மாளிகை'யும் காரைக்குடியில் அண்ணன் இராம. சுப்பையா அவர்களின் 'சமதர்ம' இல்லமும் விளங்கி வந்தன.
சுருங்கக் கூறின், தென் மாவட்டங்களைப் பொறுத்த வரை, செட்டி நாட்டிலுள்ள 'இன்ப மாளிகை'சீ.-3