பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/49

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வை. சு. சண்முகனார் 39

முத்தமிழ் நிலையம் முகிழ்த்தது

பாவேந்தர் பாரதிதாசன் மூத்தமகள் சரசுவதிக்குத் திருமண ஏற்பாடாகி விட்டது. திருமணச் செலவுக்குப் பணம் வேண்டுமே! பாவேந்தர் பணத்தையா தேடி வைத்திருந்தார்? மஞ்சுளாபாய் அம்மையாரிடம் தம் குடும்பச் சூழ்நிலையை விளக்கிக் கூறினார். அம்மையார், தம் கணவர் வயி.சு. சண்முகனாரிடம் கூறி, அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வதாகக் கூறி வந்தார்.

திரும்பி வந்த அம்மையார், தம் கணவரிடம் பாவேந்தர் நிலைமையை விளக்கிக் கூறினார். சிந்தித்து ஒரு முடிவெடுத் தார். காரைக்குடி இராம. சுப்பையா, முருகு, சுப்பிரமணியம், அரு. பெரியண்ணன், கோனாபட்டு இராமசாமி, திருப்புத் தூரைச் சேர்ந்த இமயவரம்பன், மு. நூர்முகமது (இராவணன்) முதலானோர், இன்ப மாளிகைக்கு வரவழைக்கப்பட்டனர்.

27.7.1943, 28.7.1943 ஆகிய இருநாளும் கூடிப் பேசினர். பேச்சின் முடிவில் 'முத்தமிழ் நிலையம்' என்னும் பெயரில் ஒரு நிறுவனம் உருவாகியது.

1944 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் முத்தமிழ் நிலையம், பாவேந்தரின் 'இசையமுது' என்னும் நூலைப் புதிய பதிப்பாக வெளியிட்டது. 'இருண்டவீடு' என்னும் நூலின் முதற் பதிப்பும் இங்கிருந்துதான் வெளியாகியது. 'கற்கண்டு' என்னும் நூலையும் வெளிக் கொணர்ந்தது.

பின்னர் பாவேந்தரின் நீண்ட நாளைய எண்ணத்தை உருவாக்கும் முயற்சியில் முத்தமிழ் நிலையம் முயலத்