40 சீர்திருத்தச் செம்மல்
தொடங்கியது. ஒரே இரவில் ஒரே மேடையில் சொற்பொழிவு, இசை, நாடகம், நாட்டியம் ஆகியவை கலந்து, இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் படைத்துக் காட்ட வேண்டும் என்பது கவிஞரின் ஆவல். அவ்வாவலை நிறைவேற்றும் வகையில் ' இன்ப இரவு' என்னும் பெயர் சூட்டிப் பல ஊர்களில் முத்தமிழ் நிலையம் நடத்திக் காட்டியது. மன்னர் மன்னன் எழுதிய 'கறுப்புக்குயிலின் நெருப்புக் குரல்' என்னும் நூலில் இச்செய்தி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு முத்தமிழ் நிலையத்தின் வாயிலாகப் பாவேந்தர் பாரதிதாசன் புகழ் பரவத் துணை நின்றவர் நம் சண்முகனார்.
வானொலி கேட்போர் கழகம்
தமிழ்நாட்டு வானொலியில் தமிழ்ப்பாடல்கள் குறை வாகவும் பிறமொழிப் பாடல்களே மிகுதியாகவும் கேட்டு மகிழும் வாய்ப்பைத் தமிழ் மக்கள் பெற்றிருந்தனர். ஆம்; அதனை மகிழ்ச்சியாகத்தான் உணர்ச்சியற்ற நிலையில் தமிழர்கள் கேட்டு வந்தனர்.
எனினும் இளைஞர் சிலர்க்கு எப்படியோ மானவுணர்ச்சி ஏற்பட்டு, இதற்கொரு வழிகாண முயன்றனர். வானொலிப் பெட்டி வைத்திருக்கும் செட்டி நாட்டு இளைஞர்கள் கூடி, திருச்சி, சென்னை, வானொலி நிலையங்களுக்கு மடல்கள் எழுத முற்பட்டனர். தமிழ்ப் பாடல்களே பாடப்பட வேண்டு மென்றுகூட எழுத வில்லை. தமிழ்ப் பாடல்கள் மிகுதியாகப் பாடப்பட வேண்டு மென்றுதான் எழுதிக் கொண்டே இருந்தனர்