பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/52

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

42

பெரியதொரு மொழிப்புரட்சி ஏற்பட்டாலன்றித் தமிழ் மொழிக்கு விடிவு காலமேயில்லை. காந்தியடிகள், தாகூர், மறைமலையடிகள், திரு.வி.க., தேவநேயப் பாவாணர், பாரதியார், பாரதிதாசன் போன்ற பெருமக்கள் எல்லாம் தாய்மொழிப்பற்று வேண்டுமென எவ்வளவு வலியுறுத்திக் கூறியும் தாய்மொழிப்பற்று வளராப் பாறைகளாகத் தமிழர் நெஞ்சங்கள் ஆகினவே!

இவ்வாறு நாட்டு விடுதலைக்காக, தன்மான உணர்ச்சி பரவுதற் காக, சாதிவேற்றுமைகள் அகற்றப்படுவதற்காக, தமிழ்மொழி வளர்ச்சிக்காக, தமிழிசை கேட்பதற்காகப் பல்வேறு நிலைகளிற் பங்கு கொண்டு பாடுபட்டு வந்த பெருமை படைத்தவர் நம் சண்முகனார். அதுவும் தம் வாழ்க்கைத் துணைவியாருடன் பொது நலம் பேணித் தொண்டு செய்தவர்.