பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வை. சு. சண்முகனார் 47 'நான் இங்கே உட்கார வரவில்லை; நீ செய்த அக்கிரமத்தைக் கேட்டுட்டுப் போகத்தான் வந்தேன்' என்றார் வந்தவர். 'அக்கிரமமா? எ ன் ன அக்கிரமம்? என்று வினவினார் சண்முகனார். 'ஒன்று ந் தெரியாதது போல் பேசுகிறாயே! எங்க குடும்ப கெளரவத்தையே கெடுத்து விட்டாயே! எங்க வீட்டுப் பெண் வாழ்க்கையையும் பாழாக்கி விட்டாயே! நீ உருப்படுவாயா?" என்று பொரிந்து தள்ளிவிட்டார். அடே! அதைச் சொல்கிறீரா?' என்று கூறிவிட்டு அமைதியாக நிலைமைகளை விளக்கினார் சண்முகனார். வந்தவர் செவிசாய்ப்பதாக இல்லை. 'உன் சமாதானத்தைக் கேட்க வரவில்லை. நீ உருப்படுவாயா? எல்லாத்தையுங் கெடுத்து விட்டாயே! என்று குதிக்கிறார். 'சரி, நீங்கள் ஆத்திரத்தோடு வந்திருக்கிறீர்கள்; வ்வளவு எடுத்துச் சொன்னாலும் உங்களுக்கு ஏறாது; நான் செய்ய வேண்டியதைச் செய்தேன். உங்கள் ஆத்திரம் தீரத் திட்டிவிட்டுப் போங்கள்,' என்று சொல்லி விட்டு அமைதியானார். வந்தவர் எவ்வளவு பேச வேண்டுமோ அவ்வளவும் பேசித் தீர்த்துவிட்டு வெளியேறி விட்டார். சண்முகனார் பிரித்துக் கொண்டிருந்தாரே தவிர, வாயைத் திறக்கவே இல்லை. அவ்வளவு வசவுகளையும் கேட்டு அமைதி பாகத் தாங்கிக் .ெ க | ண் டி ரு ந் த நெஞ் சுரத்தை, ராண்மையை- தம்மையிகழ்வார்ப் பொறுக்கும் 1ண்மையை நான் நினைந்து நினைந்து வியந்தேன்.