பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/74

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

64 சீர்திருத்தச் செம்மல்

"கானாடுகாத்தானுக்குப் புறப்பட்டு வரும்படி கவிஞரிட மிருந்து (பாரதிதாசன்) எனக்கோர் அவசரக் கடிதம் வந்தது. கானாடு காத்தான் தனவணிகர் திரு. வை.சு. சண்முகம் அவர் மனைவியார் திருமதி மஞ்சளாபாயும் பாவேந்தருக்கு மிகவும் வேண்டியவர்கள். வை.சு. சண்முகஞ் செட்டியார் அப்போது செல்வச் செழிப்போடு வாழ்ந்து கொண்டிருந்தார். அவர் வீடான 'இன்ப மாளிகை'க்கு நான் சென்றேன். பாவேந்தரும் எனக்கு முன்பே அங்கு வந்து காத்திருந்தார்கள்... ஒரு திங்கள் கழித்து நானும் பாவேந்தரும் மீண்டும் கானாடுகாத்தான் சென்றோம்."

இவ்வாறு 'இன்பமாளிகை' எப்பொழுது பார்த்தாலும் விருந்து! விருந்து! விருந்து மயமாகவே கலகலப்புடன் காணப்படும்.

காந்தி, பெரியார், பாரதி, பாரதிதாசன் போன்ற தலைசிறந்த பெருமக்கள் விருந்துண்ட இன்பமாளிகையில் நானும் விருந்தின னாகச் சென்று, அளவளாவும் பேறு பெற்றுள்ளேன் என்பதை எண்ணும் பொழுது உள்ளம் சிலிர்க்கிறது; பூரிக்கிறது!

1950 ஆம் ஆண்டு முதன்முதலாக இன்பமாளிகைக்குக் குடும்பத் துடன் சென்றேன். அம்மாளிகையைக் கண்டு வியந்து, சிறிது அச்சத்துடன் தயங்கித் தயங்கியே நுழைந்தேன்.

நுழைந்த சில நொடிப் பொழுதில் அச்சமும் தயக்கமும் அகன்றன. செல்வச் செருக்கு அங்கே எள்ளளவுந் தலை காட்ட வில்லை. 'வாங்க தம்பி! வா செல்வி' என்று அன்பொழுக அம்மா வரவேற்றார்கள். 'வாப்பா! வா ஆத்தா' என்று உரிமையுடன் வரவேற்றார்