பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/88

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

78 சீர்திருத்தச் செம்மல்

கோபமா இருந்தார். உடனே நான் (இராம. சுப்பையா) கிளம்பிட்டேன். எங்க கூட சாமி. பழநியப்பனும் வந்தாரு.

கானாடுகாத்தான் போய், இந்த விஷயத்தைப் பத்திப் பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்னே பொதுவாய் பேசிக்கிட்டிருக்கும் போதே பாரதிதாசனுக்குக் கோபம் வந்திடுச்சு. 'எழுந்திருங் கப்பா... இனிமே இந்த வீட்லே ஒரு நிமிஷம்கூட இருக்கக் கூடாது'ன்னு சத்தம் போட்டார். வேகமாக வாசலுக்கு வந்தோம். (நகரத்தார் வீடுகள் மிகப் பெரிதாக இருப்பதால் முகப்பு வாயில் பூட்டப் பட்டிருப்பது வழக்கம். வேறு வழியில் புழக்கமிருக்கும்)

சாமி. பழநியப்பன், கவிஞர்கிட்டே, 'ஐயா, வீடு பூட்டியிருக் கிறது' ன்னு மெதுவாச் சொல்ல, சத்தம் போட்டு 'உடை'ன்னாரு. கம்பியை எடுத்துப் பூட்டிலே ஓங்கி அடிச்சேன். உடைஞ்சு விழுந்திடுச்சு. மூணு பேரும் வேகமாக வீடு வந்து சேர்ந்தோம்."

இவ்வாறு கோபமாக வெளிவந்த பாரதிதாசனை அதன்பிறகு பலமுறை இன்பமாளிகையிற் பார்த்திருக்கிறேன். அந்த நேரத்திற்குத் தான் அப்படி. அதன் பிறகு அதை மறந்தே விடுவார்கள்.

வயி.சு. சண்முகனாரும் பாவேந்தரும் இந்நாள் இலர். அவர்க்குப் பிறகும் கூட இரு குடும்பமும் தொடர்பு கொண்டு விளங்குகிறது.

நாமக்கல் கவிஞர் நட்பு

பிற்காலத்தில் அரசவைக் கவிஞராக விளங்கிய நாமக்கல், வே. இராமலிங்கம் பிள்ளையவர்கள்.