இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
82
இன்ப மாளிகை என் சொந்த மாளிகையாகவே விளங்கி வந்தது. அக்குடும்பத்தில் நானும் ஓர் உறுப்பினனாகவே இருந்து வருகிறேன்.
சண்முகனாரிடம் அன்பும் உரிமையும் நான் பெற்ற அளவிற்கு, உதவிகள் பெற்றிலேன். உதவிகள் பெறுமளவிற்குச் சூழ்நிலைகள் ஏற்படவில்லை. மேலும் நான் தொடர்பு கொண்ட காலத்தே, சற்று நொடித்திருந்தார்.
பாட்டுப் பறவைகள் உலவிய அந்த இன்ப மாளிகை, அரண் மனையோ என ஐயுறத்தக்க அக் கொலுமண்டபம் இப்பொழுது மண்மேடாக்கப்பட்டுக் கிடப்பதைக் காணின் நெஞ்சங் குமுறும்! வயிறு பற்றி எரியும்!
ஒரு முறை என்னை விளித்து, தம் மகள் பார்வதி நடராசனைச் சுட்டிக்காட்டி, 'இனி, இவள் உன் அக்காள்; ஏதேனும் உதவி தேவை எனில் அக்காளிடம் போய்ச் சொல்' என்று கூறினார். அவ்வாறே என் உடன் பிறந்த தமக்கை யாகவே அம்மையாரும் இருந்து வருகிறார்.