பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/98

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

88 சீர்திருத்தச் செம்மல்

ஒப்புரவாளராகி, மீமிசை மாந்தராக விளங்கினார் அவர்.

பாரதியார், சண்முகனார்க்கெழுதிய மடல்களின் கட்டு களை, சண்முகனாரின் இல்லத்தில் நான் பார்த்திருக்கிறேன். இப்பொழுது அம்மடல்கள் இருக்குமிடம் தெரியவில்லை. அவை கிடைப்பின், பாரதியாரைப் பற்றியும் சண்முகனாரைப் பற்றியும் அரிய செய்திகள் நமக்குக் கிட்டும்.

இப்பாடலில் வரும் "யாம் நாடும் பொருளை எமக்கீந்து எமது வறுமையினை இன்றே கொல்வாய்" என்ற வரிகள் நம் நெஞ்சத்தைக் குடைகின்றன. வறுமையில் அம் மாபெருங் கவிஞன் வாடியதையும் 'இன்றே கொல்வாய்' அவ்வறுமையை எனக் கதறுவதையும் நாடும் பொருளை எமக்கீவாய் என வேண்டுவதையும் நினையும் பொழுது உள்ளம் உடைகிறது.

கரந்திருந்த பாடல் திருடப்பட்டது

மறைந்து கிடந்த இப்பாடல் உலகறிய வெளி வந்ததே ஒரு கதை. பாரதியார் பாடலொன்று சண்முகனாரிடம் இருக்கிற தென்பதை அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது அறிந்து கொண்டோம். அதனைப் பார்க்கலாமா? என்று நாங்கள் வேண்டிய பொழுது மறுத்து விட்டார்.

எனக்கும் நண்பர் தமிழண்ணலுக்கும் அப்பாடலைப் பார்த்துவிட வேண்டுமென்று ஒரே துடிப்பு. அவர் துணைவி யார் மஞ்சுளாபாய் அம்மையாரிடம் தனியே கெஞ்சினோம். 'சரி, இன்னொருநாள் வாருங்கள்; தேடி எடுப்போம்' என்றார்.