பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


தமிழகத்தில் மூவேந்தரும், பின்னர் பல்லவரும், மறைந்த பின்னர், குறுநில மன்னர்களாகவும், சிற்றரசர்களாகவும் வேளிர்களாகவும் வாழ்ந்த நிலக்கிழார்களை கி.பி.1378 - முதல் கி.பி.1736 வரை பாளையக்காரர்களாகவும், அவர்களது கைப்பற்றில் இருந்த சொந்த நிலப்பரப்பை பாளையங்களாகவும், விஜயநகர பிரதிநிதிகளும், மதுரை நாயக்க மன்னர்களும் அறிவித்து இருந்தனர். ஆற்காட்டு நவாப்புகளின் ஆட்சியிலும், அதே பாளையங்கள் அல்லது பாளையப்பட்டு முறைதான், கி.பி.1801 வரை தொடர்ந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் சேதுபதி நாட்டிலும், சிவகங்கைச் சீமையிலும் பாதுகாப்பு நிலையில் “பாளையங்கள்” தான் இருந்தன. “ஜமீன்களும்” “ஜமீன்தாரி முறையும்” அப்பொழுது இல்லை. இந்த வடமாநில அமைப்பு முறையை தமிழகத்தில் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியார் தான் பத்தொன்பதாவது நூற்றாண்டின் தொடக்கத்தில் புகுத்தினர். வரலாற்று நிலை இப்படி இருக்க, மன்னர் முத்து வடுகநாதர் அரண்மனை சிறுவயல், உறுதிக்கோட்டை ஜமீன்களை ஏற்படுத்தி அவைகளுக்கு மருது சகோதரர்களை ஜமீன்தாரர்களாக நியமனம் செய்தார் என்று உண்மைக்கு மாற்றமாக எழுதி இருப்பதை எப்படி நம்புவது?

இதனைப் போன்றே ராணிவேலுநாச்சியார் கி.பி.1780-இல் சிவகங்கைச் சீமையை மீட்ட சிலநாட்களில், பிரதானிகளான மருது சகோதரர்களிடம், சீமையை அளித்துவிட்டார் என்பதும், இதே சிவகங்கை நூலாசிரியரது சரடுகள் ஆகும். இந்த புரட்டுக்கள் எந்த அளவிற்கு உண்மைக்கு புறம்பானது என்பதை சிவகங்கை அரசியல் நிகழ்வுகள் தெளிவாக அறிவுறுத்துகின்றன. சிவகங்கைச் சீமையிலிருந்து பேஷ்குஷ் தொகை (ஆண்டுத் தொகை) ஆற்காட்டு நவாப்பிற்குச் செலுத்தப்படாத காரணத்தினால், தளபதி புல்லர்ட்டன் தலைமையில் கி.பி.1783-ல் கும்பெனியாரது படைப்பிரிவு ஒன்று சிவகங்கைக்கு அனுப்பப்பட்டது.[1] இந்தப் படை எடுப்பை முறியடிக்க பிரதானிகள், முதலில் திட்டமிட்டு காளையார் கோயில் பகுதியில் பத்தாயிரம் மறவர்களை திரட்டிய பொழுதும், பின்னர் தங்களது திட்டத்தை மாற்றிக்கொண்டு, தங்களது எஜமானிக்காக, பிரதானிகளே தளபதி புல்லர்ட்டனிடம் நாற்பதினாயிரம் ரூபாய் செலுத்தினர் என்பதை தமிழ்நாடு அரசு ஆவணக்காப்பக ஆவணங்கள் மட்டுமல்லாமல் அலெக்ஸாண்டர் நெல்சன், பேராசிரியர் ராஜையன் ஆகிய நூலாசிரியர்கள் தங்களது நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். கி.பி.1789-ல் கும்பெனித் தளபதி ஸ்டுவர்ட், ராணி வேலுநாச்சியாருக்கு எதிரான பிரதானிகளது கலகத்தையடக்கியதும்.[2] கி.பி. 1789 நவம்பரில் ஆற்காட்டு நவாப்பும், கும்பெனியாரது சென்னை கவர்னரும் மருது சகோதரர்களை சிவகங்கை சீமைப் பிரதானிகளாக


  1. Williams Fullarton's report military Sundries. Vol. 66 (1784)
  2. Military Consultations Vol. 130/16.6. 1789. P: 1683