பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


அத்துடன் பாக்கித் தொகையுடன் பக்கத்தில் உள்ள சர்க்கார் கிராமங்களைத் தாக்கி அழிமானம் செய்ததற்காக ரூ. 90,000/உடனடியாகச் செலுத்த வேண்டும் எனக் கோரினேன். தவறினாலோ, இதனை நிறைவேற்றாவிட்டாலோ அவர்களது காட்டையும், கோட்டையையும் தாக்கி சீமையில் இருந்து அவர்களைத் துரத்துவேன் என்று தெளிவுபடுத்தினேன். இந்துக்களுக்கு உரிய உணர்வுடன் அவர்கள் நாற்பதாயிரம் ரூபாயை மட்டும் செலுத்தியதுடன் பாக்கி தொகைக்கு தக்க பொறுப்பு கொடுத்தனர்.[1]

இவ்விதம் தனக்கு ஏற்படவிருந்த ஒரு பயங்கரமான அழிமானத்தில் இருந்து சிவகங்கையின் புதிய அரசு தன்னை அப்பொழுது தற்காத்துக் கொண்டது.

ஆற்காட்டு நவாப்புடன் 2.12.1781 கும்பெனியார் செய்து கொண்ட உடன்பாட்டின் படி நவாப் செலுத்த வேண்டிய கடன் பாக்கிக்காக நவாப்பிற்கு வர வேண்டிய வருமானங்களை வசூலிக்கவும், அவற்றில் ஆறில் ஒரு பங்கை நவாப்பின் உபயோகத்திற்கு கொடுத்து விட்டு பாக்கித் தொகையை கடன் பாக்கியில் வரவு வைத்துக்கொள்ளக் கூடிய உரிமையை, கும்பெனியார் பெற்று இருந்தனர்.[2] இந்த பணிக்கென நியமனம் செய்யப்பட்டிருந்த கும்பெனியாரது குழுமம் குறுநில மன்னர்களிடமும் பாளையக்காரர்களிடமும் வசூல் பணியைத் தொடர்ந்தது. இந்தக் குழுமம் நவாப் பொறுப்பில் இருந்த திருப்புவனம் பகுதியை சிவகங்கைக்கு திருப்பிக் கொடுத்ததுடன், நவாப்பிற்கு செலுத்த வேண்டிய பேஷ்குஷ் தொகையின் அளவிலும் மாற்றம் செய்தது. இவைகளுக்கு பிறகும் சிவகங்கை சீமையில் இருந்து பேஷ்குஷ் தொகை ஏதும் வரவில்லை என்பதை அறிந்த நவாப் ஆத்திரம் அடைந்தார். சிவகங்கையை அடக்கி தொகையை பெறுவதற்கு கி.பி. 1786-இல்

கும்பெனியாரது உதவியை நாடினார். ஆண்டுத் தொகையை வசூலிப்பதற்கு ஒவ்வொரு முறையும் ஆயுதப் படையை அனுப்புவது என்பது அபாயகரமானது என கும்பெனியார் நவாப்பிற்கு அறிவுறுத்தினர்.[3]

வேறு வழியில்லாமல் பொறுமையுடன் இருந்த நவாப்பிற்கு நல்லதொரு வாய்ப்புக் கிட்டியது. கி.பி. 1788-ல் ராணி வேலுநாச்சியாருக்கும் மருது சேர்வைக்காரர்களுக்கும் இடையில் பிணக்கு உச்ச நிலையை எட்டியது. சிவகங்கைக் குடிகள் ராணி வேலு நாச்சியாரது விசுவாசிகளாக ஒரு


  1. Report of General Fullarton Military Sundries. Vol.65 & 66. P:48-49
  2. Collection of Treaties. Vol.5. P: 181 (Tamilnadu Archives)
  3. Military Country Correspondence. Vol. 35. P. 209-210