பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 125

இரண்டாவதாக, மருது சகோதரர்களது சூழ்ச்சியில் இருந்து தப்பி அறந்தாங்கி காட்டில் தலைமறைவு வாழ்க்கையில் இருந்த நாலுக்கோட்டைப் பாளையத்தின் பங்காளியான படைமாத்துார் கெளரி வல்லப ஒய்யாத் தேவரை புதுக்கோட்டைத் தொண்டமான் மூலம் தேடிப்பிடித்து அழைத்து வந்து 12.9.180 தேதி சோழபுரத்தில் சிவகங்கை ஜமீன்தார் என முடிசூட்டினான்.[1]

இந்த நடவடிக்கைகளுக்கு உடனடியான பலன் ஏற்பட்டது. மருது சகோதரர்களைதங்களது மாபெரும் தலைவர்களாக மதித்துச் செயல்பட்ட மக்கள் கூட்டம், பிரித்தாளும் கொள்கையில் தேர்ச்சி பெற்ற கும்பெனியாரது உத்திகளில் சிக்குண்டு சோழபுரம் நோக்கி ஓடியது. கும்பெனிப் படைகளைச் சந்திப்பதற்கு காளையார்கோவில் கோட்டையிலும் பக்கத்துக் காடுகளிலும் உரிய ஏற்பாடுகளைச் செய்த சிவகங்கை பிரதானிகளுக்கு இது பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. என்றாலும் மனம் தளராது செப்டம்பர் 30, அக்டோபர்1 ஆகிய நாட்களில் ஒக்கூர், சோழபுரம், அரண்மனை சிறுவயல் வழியாக காளையார்கோவில் நோக்கி வந்த கும்பெனி படைகளுடன் பிரதானிகள் மோதினர். முடிவு தோல்வி.[2]

கி.பி.1801-1802ல் சிவகங்கைச் சீமையில் நடைபெற்ற நிகழ்வுகளைப் பற்றி என்னுடைய “மாவீரர் மருது பாண்டியர்” என்ற நூலில் விவரமாக வரையப்பட்டுள்ளதால், அவைகளை மீண்டும் இங்கு விரிவாக எழுதப்படவில்லை.

எஞ்சியவர்களுடன் காட்டிற்குள் தப்பிய மருது சகோதரர்களை கும்பெனிப்படைகள் ஒக்கூருக்கும் சோழபுரத்திற்கும் இடைப்பட்ட காட்டில் 19.10.180 தேதியன்று கைப்பற்றினர்.[3] 24.10.180 தேதி காலையில் திருப்புத்தார் கோட்டையில் தூக்கில் ஏற்றி[4] சிவகங்கைச் சீமையின் வீரவரலாற்றை முடித்தனர்.

சிவகங்கை மன்னர் வேங்கன் பெரிய உடையாத் தேவர் கும்பெனியாருக்கு எதிரான நடவடிக்கை எதிலும் நேரடியாகக் கலந்து கொள்ளவில்லையென்றாலும், பிரதானிகளது அத்துமீறல்களுக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டு. குற்றவாளிகள் அல்லாமல் குற்றமற்றவர்களும் தண்டிக்கப்படுவது உண்டு. சிவகங்கை போராளிகளைப் பொறுத்த வரையில், அவர்கள்,


  1. கமால்.எஸ்.எம். மாவீரர் மருதுபாண்டியர் (1989) பக்: 136, 137
  2. Military Consultations Vol. 288(A) 1.10.1801. P: 6864-66
  3. Military Consultations Vol. 289 (21.10.1801) P: 7671-75
  4. Military Consultations Vol. 289 (24.10.1801) P: 7676-78