பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 139

21. ய பரிபாலனம் பண்ணி அருளாநின்ற சாலிவாகன சாகத்தம் 1716கலிய
22. த்தம் 4895 இதன் மேல் செல்லாநின்ற ஆனந்தனாம சம்வச்சரத்தில் உத்தராய
23. னத்தில் சோபகிறிதுவில் மீனமீஉசுஉ கிருஷ்ணபச்சத்தில் தெசமியும் சோமவாரமும் உத்திராட
24. நட்சத்திரமும் பரிநாம யோகமும் பத்திரவாகரணமும் இப்படிக்கொத்த சுபயோக சுபதினத்தில்
25. ல் சேது மார்க்கத்தில் பிறதானி மருது சேர்வைக்கார் சூடியூர் சத்திரம் அன்னதான தற்மத்துக்கு
26. ஆபஸ்தம்ப சூத்திரத்தில் கவுண்டினிய கோத்திரத்தில் அசுகாத்தியங்காரன வேங்குடேசுர
27. வதானியன் குமாரன் வேங்கிடசுப்பாவதானியாருக்கு பூமித சாசனம் பண்ணிக்குடுத்த
28. கிறாமமாவது பாண்டிய தேசத்தில் தோவூர் கூத்தத்தில் மேலை மங்கல நாட்டில செய்யாளுரு
29. ம்மேலை பிடாவூர் மளவனேந்தலும் புத்தூர் தட்டில்புனல்ப்பிறளய நாட்டில் முள்ளக்குடி பாலே
30. ந்தலும் இந்த அஞ்சு சிறாமத்துக்கும் பரிணான் கெல்கை கண்டபடி செய்யாளுருக்கு பரினான்
31. கெல்லையாவது கீள்பாற்றிக் கெல்கை கம்மாகல்லுக்கும் வெள்ளையக்கோன் பேயாட்டுக்
32. க்கு மேற்கு தென்பாற்கெல்கை மாசான புஞ்சைக்கும் பிடாவூர் மணபுஞ்சைக் கல்லுக்கும் வட
33. க்கு மேற்கு தென்பாற் கெல்கை படையன் குளத்துக்கும் புதுகுளத்.... எல்கை கல்லுக்கும் பறை
34. யன் பேயாட்டுக்கும் சின்ன உடைப்பான் கரைக்கும் கண்ணப்பள்ளத்துப் புஞ்சைக்கும்
35. கிளக்கு வடபாற் கெல்கை வலையன் கண்மாய் புறக்கரைக்கு தெற்கு மேலை பிடாவூரு
36. க்கு மறவனேந்தலுக்கும் பரிநான் கெல்கையாவது கீள்பாற் கெல்கை பிடாவூர் வீரமகாளி
37. அம்மன் கோயிலுக்கும் புளிங்குளத்து எல்லைக்கும் இடையன் தாவுக்கு புல்லத்தி கண்
38. மாய் முடுக்கு கரைக்கும் மேற்கு தெற்பாற் கெல்கை வீரப்பனாயக்கன் கண்மாய் புறக்கரையில்.
39. கடைப்புளி எல்கை கல்லுக்கும் கல்லிச்சேரிக் கண்மாய் மேலக்கால் புற எல்கை.
40. க்கல்லுக்கும் வடக்கு மேல்பாற் கெல்கை மணல்புஞ்சைக்கும் வலையன கணமாய் புறக்க
41. ரைக் எல்லைக் கல்லுக்கும் கிளக்கு வடபாற்கெல்கை அத்தியபடி ஊறணிக்கும் கொத்தாம் பெட்டி