பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

42. ல் ஊறணிக்கும் மறத்தளி எல்கைக்கும் தெற்கு முள்ளிக் குடிக்குப் ப
43. ரினான் கெல்கையாவது கீள்பாற்கெல்கை புத்துார் தனி இலுப்பைக்கும் மேற்கு தென் பாற்கெல்
44. கை பிடாரிசேரி ஆண்டியப் பிள்ளை ஊறணி வடகரையுள்பட வடக்கு மேல் பாற்கெல்கை
45. பாலேந்தல் சக்கிலியன் புளிக்கும் ஷை புஞ்சைக்கும் கிளக்கு வடபாற் கெல்கை வேளா
46. னேரி சுக்கிரன்பந்தி ஊறணிக்கும் கள்ளுப்பட்டி புஞ்சைக்கும் தெற்கு பாலேந்தல் பரினான்
47. கெல்கை கண்டபடி பரினான் கெல்கையானது கீள்பாற் கெல்கை முள்ளிக்குடி எல்லைக்கும்
49. பாதைக்கும் வடக்கு மேல்பாற் கெல்கை கரிசலூறணிக்கும் முடுவுக்குப் புஞ்சைக்கு வல்
50. லங்குடி எல்கைக்கும் கிளக்கு வடபாற்கெல்கை முள்ளிக்குடி காலுக்கும் பிறண்டை...
51. ஆலங்குளம் எல்லைக்கும் தெற்கு இந்த அஞ்சு கிராமத்து பரினான் கெல்லையுள் உள்ளபுர
52. வுக்கு உள்பட ஏந்தல் புறவடை நஞ்சை புஞ்சை திட்டுதிடல் குட்டம் குளி நத்தம் செய்த
53. தலைப் பாசி படுகை மாவடை மரவடை மேல் நோக்கிய மரங்கள் நோக்கிய கிணறு ஆத்துக்காலு
54. த்துக்கால் நிதி நிடசேப செலதரு பாஷன ஆட்சி ஆகாய சித்த பாத்திய மென்றுசொ
55. ல்லப்பட்ட அஷ்ட்ட போக தேசுவாமியங்களும் தானாதி வினிமய விக்கிறையங்களுக்குயோ
56. க்கிய மாகவும் சில்வரி பெருவரி ஏதோ... வரியும் சறுவ மானியமாக தானம் பண்ணிக்கு.
57. டுத்து பிறதானி மருது சேர்வைக்காரர் தற்மாசனத்தில் கிறையத்துக்கு வாங்கு(ன) சத்திரம் அன்ன.
58. தானத்து தானம் பண்ணிக்குடத்த சிறாமங்களில் குடியூரில் சத்திரப்பங்கு விரையடி
59. 75 இம்மனேந்தல் மறவனேந்தல் விட யருள்யும் விரையபடி 90 மானிய
60. மாகவும் மற்ற கிராமங்களுக்கு அரை வரியாகவும் கருப்புக் கட்டி தேராம பாதுகாவல் கரை
61. மீ யும் வெள்ளைக்குடை பட்டயவரி அங்க சுங்க மற்றும் சில்வரி பெருவரி ஏதோ வரியும் சத்திர
62. த்துக்கு சறுவமானியமாக தானம் பண்ணி குடுத்ததினாலே ஆசந்திராற் சஸ்தாயியாக சந்தி
63. ராத்திய சந்திரப் பிறவேசம் வரைக்கும் புத்திர பவுத்திர பாரம்பரையாக சத்திரம் அன்னதானமும்