பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

நூற்றாண்டு முழுவதும் சிவகங்கை ஜமீன்தார்கள் உரிமை வழக்குகள் நீதிமன்றங்களில் குவிந்து வந்தன.


இத்தகைய வழக்குகளைச் சந்தித்தவர்களாக, அந்த வழக்குகளின் தீர்ப்புரையையொட்டி சிவகங்கை ஜமீன்தார்களது பதவிக்காலமும் இருந்து வந்தது. அந்த ஜமீன்தார்களது பட்டியல் பின்வருமாறு.

1. முத்துவடுக நாதத் தேவர் கி.பி.1830-31
(படைமாத்தூர் ஒய்யாத் தேவர் மகன்
2. (௸யார் மகன்) போத
குருசாமித் தேவர்
கி.பி.1831-35
3. ராணி அங்கமுத்து நாச்சியார் கி.பி.1835-37
(கோர்ட் அட்டாச்மென்ட்) கி.பி.1837-44
4. கெளரீ வல்லபத் தேவர் கி.பி.1844-48
(இரண்டாவது)
(கோர்ட் ஆவ் வார்டு)
கி.பி.1848-59
5. இரண்டாவது போத
குருசாமித் தேவர் என்ற
அரண்மனைசாமித் தேவர்
கி.பி.1859-60
6. ராணி காத்தம நாச்சியார் கி.பி.1864-77
(குத்தகைதாரர்
பி. கிருஷ்ணசாமி செட்டி)
கி.பி.1877-78
7. துரைச் சிங்கத் தேவர் கி.பி.1878-83
(குத்தகைதாரர்கள்
ஸ்டிராநாக்கும் மற்றும்
இருவரும்)
1883-88
8. பெரிய சாமி என்ற கி.பி.1888-98
உடையணத் தேவர்
(துரைச்சிங்கத் தேவர் மகன்)
9. துரைச்சிங்கத் தேவர் கி.பி.1898-1941
10. து. சண்முக ராஜா கி.பி.1941-1963
11. கார்த்திகேய வெங்கடாசலபதி கி.பி.1863-79


இந்த உரிமையியல் வழக்குகள், ஜமீன்தார்களது பொருளாதார வளத்தைப் பெருமளவு பாதித்தது என்று சொன்னால் மிகையாகாது. இவர்களது சமுதாயப் பணிகளும் இதன் காரணமாக முடக்கம் பெற்றுவிட்டன. தவிர்க்க முடியாத சூழ்நிலையிலும் தங்களது பாரம்பரியப் பண்பினால் அவர்களில் சிலர் அறக்கொடை வழங்குதலையும், திருப்பணிகளை நிறைவேற்றி இருப்பதையும் கீழ்க்கண்ட சாதனைகளில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.