பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 189


கட்டளை கொடுத்து விசாரித்த முகூர்த்தமாய் நெல்லையப்ப முதலியார், பிரபலமாகி பொன்னம்பல முதலியார்புரம் அபிமான படியினாலே, நாவலோகம் பெருந்தீவிலுண்டான பறகைக்குடயார், தொட்டியபட்டியார், தொழுவூராரர், கொல்லங்குடியார், சுரசனேந்தலார், கட்டார் குடியார், கன்னாரிருப்பு ஜனங்கள், ஈழம்புசையார், துலுக்கானியார், லாடபுரத்தார், பள்ளிமடத்தார், பறைக்குளத்தார், சக்கிலி வயலார், இப்படி அநேகம் வகுப்பு சொல்லப்பட்ட வர்க்கத்து ஜனங்கள் எல்லாம், அவரவர் குடிக்கும் கோத்திரத்துக்கும், கற்பித்திருக்கிற ஜாதித்தொழிலை முயற்சி பண்ணிக்கொண்டு, மேல் வரம்பு கீழ்வரம்பு அறிந்து நடந்து கொண்டு, சகல பாக்கியத்துடன் இருக்கிறார்கள். ஆகையிலே அகண்ட பரிவுகாரான சச்சிதானந்த பரப்பிரும்மாகிய ஆதிபரா பரவஸ்துவான சுவாமி அவர்களுடைய கிருபையினாலே மகாவிஷ்ணு பிம்பமாகப் பூலோகத்திலே வந்து அவதரித்து மனு நீதியோருங்கூட மண்டலாதிபதியும் அடியேங்களை ரகழிக்கின்ற இராஜ வர்க்கங்களும், சுகிர்த பரிபாலன காத்தவலியரான படியினாலேயும் பூலோகத்திலே தேவாலயம், சிவலிங்கப் பிரதிஷ்டை, பிரம்மப் பிரதிஷ்டை, உபநயனங்கள், கன்னிகாதானம், அன்ன சத்திரம், ஆத்திபூஜை, திருப்பணி, தேவதாபிரார்த்தனை, தர்மத்தியானமான தண்ணீர்ப்பந்தல், பிராமண போசனங்கள், துவாதசி கட்டளை இது முதலான நித்தியதானம் நடத்திக் கொண்டு வருகிற படியினாலே...' என நீண்டு முடிகிறது அந்தக் கதை.

இந்தக் கதையினை கேட்டு மகிழ்ந்த மன்னர் முத்து வடுக நாதர், புலவருக்கு சாத்தசேரி என்ற ஊரினை சர்வமான்யமாக வழங்கி உதவினார். அந்த ஊரினை நேரில் சென்று பார்வையிட்டு வந்த புலவர் மன்னரிடம் இந்தப் பாட்டினை பாடினார்.

"கொம்பிரண்டும் இல்லாத மோளைக் கண்மாய்
குளக்காலும் இல்லாத சாத்தசேரி
வம்புபண்ணிப் பெருங்கரையான் வெட்டும்
வாழ்க்கைக்கு உதவாத உவட்டுப் பொட்டல்..."

அதற்கு மேல் புலவரது பாடலைக் கேட்க விரும்பாத மன்னர், உடனே தமது பிரதானியை அழைத்து வளம் மிக்க ஊர் ஒன்றினைப் புலவருக்குப்பட்டயமிட்டு கொடுக்குமாறு செய்தார். திருப்பூவண நாதர் உலா பாடிய கந்தசாமிக் கவிராயரையும் இந்த மன்னர் ஆதரித்துப் போற்றினார்.

இந்த மன்னரை அடுத்து சிவகங்கை அந்நிய ஆக்கிரமிப்புக்கு ஆளாகியது. அடுத்து கி.பி.1780-1801 வரை ராணி வேலு நாச்சியாரும், விசைய ரகுநாதப் பெரிய உடையாத் தேவரும் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்தனர். பிற துறைகளில் அவர்கள் ஒரளவு சிறந்த பணிகளைச் செய்த போதிலும்,