பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 191


இரண்டாவது முறையாக சிவகங்கை ஜமீன்தாரி 23.5.1887-ல் ஐரோப்பிய பிரமுகர்களான ராபர்ட் கோர்டன், ஜெ.ரெயான், இ.எப்.ஸ்ரானாக் என்ற மூவருக்கும் ஜமீன்தாரி, பெரிய சாமித் தேவர் எனற உடையனத் தேவரால் இருபத்து இரண்டு ஆண்டுகள் தவனை குத்தகைக்கு கொடுக்கப்பட்டது.[1] மேலே கண்ட இரு ஜமீன்தார்களுக்கும் முன்னர். கி.பி.1859-ல் ஜமீன்தாரான போதகுரு சாமித் தேவர் கலைகள், இலக்கியங்களில் சிறந்த ஈடுபாடு உடையவராக இருந்தார். பழுத்த மரம் நோக்கித்தானே பறவைகள் வரும். இவர் தமிழ்ப் புலவர்களை ஆதரித்து உதவினார் எனத் தெரிய வருகிறது. நீல வானிலே நெகிழ்ந்த நிற மாற்றம் போல அமைந்த இந்த இளம் ஜமீன்தாரது தமிழ்ப்பணிக்கு கட்டியம் கூறுவதாக அமைந்து இருப்பது இவர் மீது பாடப்பட்டு உள்ள காதல் இலக்கியம். "மன்னர் போதகுரு பார்த்திபன் காதல்" என்ற இனிய சிற்றிலக்கியம். காதல் சுவையை விட தமிழ்ச் சுவை ததும்பி வழியும் தமிழ் படைப்பு. சிவகங்கை அரண்மனையில் அரங்கேறிய கடைசித் தமிழ் இலக்கியம் அதுவே.

இதனைப் போன்றே சிவகங்கைச் ஜமீன்தார்களது ஆட்சியின் பொழுது, "சிவகங்கை வேங்கைக் கும்மி" என்று சிற்றிலக்கியம் ஒன்றும் இயற்றப்பட்டதாக தெரிகிறது.


  1. Zamindars Agreement Deed. dt. 23.5.1857