பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


தேசியக் காங்கிரஸ் தலைவர்களது ஒத்துழைப்பை பெறுவதற்கு பேச்சுவார்த்தைகள் நடத்தின. ஆனால் நாட்டு மக்கள் தன்னாட்சி பெறுவதற்கான அடிப்படை எதுவும் அவைகளில் இல்லை. ஆதலால் 8.8.1942-ல் பம்பாயில் மெளலான அபுல் கலாம் ஆசாத் தலைமையில் கூடிய தேசியக் காங்கிரஸ் 'வெள்ளையனே வெளியேறு' என்ற தீர்மானத்தை பகிரங்கமாக அறிவித்தது. ஆத்திரமடைந்த அரசாங்கம் காந்தியடிகள், அபுல் கலாம் ஆஸாத், ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், இராஜேந்திர பிரசாத் ஆகிய மக்கள் தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. இதனால் நாடு முழுவதம் கொந்தளித்தது.

சிவகங்கைச் சீமையில் இதன் எதிரொலி மிகவும் தீவிரமாக இருந்தது. சிவகங்கை நகரில் 9.8.1942-ம் தேதியன்று முழு கடையடைப்பு நடந்தது. அடுத்து செய்ய வேண்டிய அரசு எதிர்ப்பு, நடவடிக்கைகள் பற்றிய திட்டம் தீட்டிய ஊழியர் திரு. கே.வி.சேதுராமச்சந்திரனும் மற்றும் தொண்டர்களும் அன்று இரவு கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து பல ஊழியர்கள் கைது. என்றாலும் ஆங்காங்கு வெள்ளை அரசுக்கு எதிராக மக்களை கிளர்ந்து எழுமாறும் இந்திய அரசுக்கு எதிராக வெளியீடுகளும், சுற்றறிக்கைகளும் மக்களிடையே பரப்பப்பட்டு மக்களை அந்நிய அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அப்பொழுது சிவகங்கை ஜமீன்தார் கோர்ட் ஆப் வார்டு பொறுப்பில் இயங்கியது. இளைஞர்களாக இருந்த ஜமீன்தாரரது மக்கள் சண்முக ராஜாவும் சுப்பிரமணியராஜாவும் தேசியத் தொண்டர்களுக்கு மறைமுகமாக பல உதவிகளை அளித்து வந்தனர். ஜமீன்தாரது அலுவலக சைக்லோஸ்டைல் அச்சுயந்திரமும், அரண்மனை ரிவால்வார் ஒன்றும் தேசியத் தொண்டர்கள் பயன்பாட்டில் இருந்தன என்றால், மேலும் விரிவாக அவர்களது உதவிகள் பற்றி வரைய வேண்டியது இல்லையல்லவா!

இவ்விதம் சிவகங்கையில் உருவெடுத்த புரட்சி இயக்கம் காரைக்குடி, தேவகோட்டை, திருவேகம்பத்து ஆகிய ஊர்களில் தீவிர நிலைகளை அடைந்தன. 17.8.1942-ல் தொண்டர்கள் மக்களைத் திரட்டி அரசாங்க எதிர்ப்பு ஊர்வலங்கள் நடத்தினர். இவர்கள் மீது போலீசார் சுட்டனர். காரைக்குடியில் ஒருவர் உயிர்துறந்தார். தேவகோட்டையில் கிருஷ்ணன் தர்மராஜன் என்ற இரு இளைஞர்களும், வள்ளியம்மை என்ற மூதாட்டியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். தேவகோட்டை நீதிமன்றம், திருவேகம்பத்து தாலுகா கச்சேரி, ஜமீன் களஞ்சியம் ஆகியவைகளுக்கு திவைக்கப்பட்டன. தொண்டர்கள் 24.8.1942-ம் தேதி பனங்குடி நடராஜபுரம் ரயில் நிலையத்திற்கு தீ வைத்து தகர்த்தனர். இந்த நிகழ்வுகளை அடுத்து தேவகோட்டை வக்கீல்கள் முகுந்தராஜ ஐயங்கார், முத்துச் சாமி, வல்லத்தரசு ஆகியோரும், வளமாவூர் இராமகிருஷ்ணத் தேவர், திருநாவுக்கரசு செட்டியார், ஆர்.வி.சுவாமிநாதன், இரவிசேரி நடராஜன், சின்ன அண்ணாமலை, தியாகி கண்ணுச்சாமி அம்பலம்