பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 203

4. ராணி வேலு நாச்சியாருக்கும் சின்ன மருது சேர்வைக்காரருக்கும் கருத்து வேறுபாடுகள் மிகுந்து, ராணியையும் அவரது குடும்பத்தாரும் உள்ள சிவகங்கை அரண்மனையை அவர்களது படைகள் முற்றுகையிட்டதும், பின்னர் 8.5.1789-ல் வந்த கும்பெனித் தளபதி ஸ்டுவர்ட் கொல்லங்குடி, காளையார் கோவில், பிரான்மலைப் போர்களில் மருது இருவரைத் தோற்கடித்து திண்டுக்கல் சீமைக்குள் பின் வாங்குமாறு செய்தது.

5. கி.பி.1792-ல் சிவகங்கை இளவரசி வெள்ளச்சி இறந்ததும், அவரது கணவரும் சிவகங்கை மன்னருமான வேங்கண் பெரிய உடையாத் தேவருக்கு பெரிய மருது தமது மகளைத் திருமணம் செய்து வைத்தது. இவையனைத்தும் அம்மானையில் இடம் பெறவில்லை.

2. சிவகங்கைச் சரித்திரக் கும்மி

தமிழ்நாடு அரசு பதிப்பு (1954), சென்னை.

சிவகங்கை அம்மானை இயற்றப்பட்டு நாற்பத்து இரண்டு ஆண்டுகள் கழிந்த பின்னர் (கி.பி.1832-ல்) சாலைக் கிராமம் முத்துசாமி என்பவரால் இயற்றப்பட்டது. ஏறத்தாழ அம்மானையை ஒட்டியே இந்தக் கும்மியும் பாடப்பெற்று இருந்தாலும், வரலாற்றிற்கு முரணான செய்திகள் இந்த நூலிலும் மிகுதியாக காணப்படுகின்றன. அவைகளில் முக்கியமான இரண்டு மட்டும் இங்கு தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

அரளிக்கோட்டைச் செப்பேட்டின்படி, முல்லையூர் தாண்டவராய பிள்ளை கி.பி.1747-ல் மன்னர் சசிவர்ணத் தேவர் உயிருடன் இருந்த பொழுதே, பிரதானிப் பணியை ஏற்றார் என்பது தெரிகிறது. அடுத்து, மன்னர் முத்து வடுகநாதரது ஆட்சி முழுவதிலும் பிரதானி பதவியை வகித்ததுடன், காளையார் கோவில் கோட்டைப் போரில் மன்னர் இறந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, பிரதானி கி.பி.1772-ல் இறுதியில் இறந்தார் என்பது உண்மை வரலாறு.

அ. ஆனால் சிவகங்கைக் கும்மி கூறுவது,

"கட்டழகன் பிரதானி தாண்டவராயன்
எட்டியே வயது சென்றதினால்
அடப்பப்பிடி வெள்ளைக் காலுடையாரீன்ற
அண்ணன் தம்பி யிருமருதும்
திடத்துடன் சுத்தவீரன் பெரியமருது
தீரன் சின்ன மருது புத்திசாலியுமாய்
சீமைய யதிகாரம் செலுத்தி வந்தார்..." (பக்கம் 10-11)

என்பன சிவகங்கைக் கும்மி கூறும் இருபெரும் பொய்யான செய்திகளாகும். தாண்டவராய பிள்ளை மூப்பு காரணமாக பதவி