பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

வளமான கற்பனைகளை சுகமான எழுத்துக்களில் சுதந்திரமாக வடித்துள்ளார்.

காளையார் கோவில் போர் முடிவிற்குப் பின்னர், அமைச்சர் தாண்டவராயபிள்ளை, ராணியாரையும் அவரது குழந்தையையும், காப்பாற்றும் பொருட்டு மைசூர் மன்னர் ஹைதர்அலிக்குச் சொந்தமான திண்டுக்கல் சீமையில் விருபாச்சியில் பத்திரமாக இருக்கச் செய்துவிட்டு சிவகங்கைச் சீமையில் ஆற்காடு நவாப்பிற்கு எதிராக மக்களைக் கிளர்ச்சிகளுக்கு ஊக்குவித்து வந்தார் என்பதும், கி.பி.1772-ல் அவரது மறைவிற்குப் பின்னர் ராணி வேலுநாச்சியார் இந்தப் பொறுப்பை மேற்சொன்னவாறு எட்டு ஆண்டுகள் கழித்து மைசூர் மன்னர் ஹைதர் அலியின் இராணுவ உதவி பெற்று கி.பி.1780-ல் சிவகங்கைச் சீமையில் ஆற்காடு நவாப்பின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டார் என்பதுதான் உண்மையான வரலாறு.

இவ்வித உண்மையான வரலாற்றை கற்பனை நயங்கள், உத்திகள் வழி, மக்களுக்குத் தெளிவாக வழங்கும் புதினத்தை படைப்பதற்குப் பதில் எடுத்துக் கொண்ட வரலாற்று நிகழ்ச்சிகளை திரித்து புரட்டி, புனைந்து வரையும் வழக்கத்தை சில நூலாசிரியர்கள் செய்து வருகின்றனர். சுயநலத்திற்காக பணம் புரட்ட, எளிதில் பேரும் புகழும் பெற அதற்கு பாலியல் என்ற நஞ்சை படிப்பாளிகள் இதயங்களில் பக்குவமாக பறிமாறும் கைவந்த கலையும் அவர்கள் கற்று வளர்த்து வந்து இருப்பதும் பிரதான காரணமாகும்.

இதன்வழி, தமிழ் புதின இலக்கியங்கள் ஏனைய இந்திய மொழிகளின் புதினங்களைப் போல அனைத்து இந்திய அளவில் குறிப்பாக மலையாளம், வங்கம், அஸ்ஸாம் மொழிகளின் படைப்புகளைப் போல படிப்பாவிகளது உள்ளங்களை கவர முடியாத முடங்களாகி வருகின்றன. அமரர் அகிலனுக்குப் பிறகு தமிழ் எழுத்தாளர் யாரும் “ஞானபீட” பரிசினைப் பெற இயலாததற்கும் இதுவே காரணமாகும்.

எதிர்காலத்தில் வழிகாட்டியான உண்மை வரலாற்றை சமுதாய உணர்வுடன் பொறுப்பாக புதினத்தின் வழி மக்களிடம் புகுத்தும் பணியை இந்த நூலாசிரியர் மேற்கொள்ளத் தவறிவிட்டார் என்பது இவரது எழுத்துக்களில் இருந்து காணக்கூடியதாக உள்ளது. ஆனைக்கு அடி சறுக்குவது இயல்புதானே!

6. மருது பாண்டிய மன்னர்கள் (1994)

ஆசிரியர்: திரு. மீ.மனோகரன்
வெளியீடு: அன்னம் பதிப்பகம், சிவகங்கை

நூல் தலைப்பைப் படித்தவுடன் இப்படியும் மன்னர்கள் சிவகங்கைச் சீமையில் இருந்தனரா என்ற வினாவை எழுப்பும் வகையில் நூலின் தலைப்பு மட்டும் அமைக்கப்படவில்லை. நூல் முழுவதும் மருதிருவர்