பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 223


கதிர்வேலு? பேராசிரியர் கே.ராஜையன் குறிப்பிட்டு இருக்கின்றனரா? இல்லையே. இந்த நூலாசிரியரது அடிக்குறிப்பு ஒன்றும் இல்லையே. அப்படியானால் இதுவும் நூலாசிரியரது கண்டுபிடிப்பா? அல்லது கற்பனையா? நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கக்கூடாது என்றாலும் நமக்குக் கிடைத்துள்ள ஆவணங்களைப் பார்ப்போம். நாலுகோட்டை பெரிய உடையாத் தேவரது கொடி வழி (இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது) எப்படி வேங்கன் பெரிய உடையாத் தேவர் நாலுகோட்டை வழியினர் அல்ல. அடுத்த ஆவணம் அறந்தாங்கிக் காட்டில் தலைமறைவு வாழ்க்கையில் இருந்த படைமாத்துார் கெளரி வல்லப உடையாத் தேவர் புதுக்கோட்டை ரெசிடெண்ட் பிளாக்பர்னுக்கு, ரெளத்திரி ஆண்டு, வைகாசி மாதம் 27-ம் தேதி ஒப்பமிட்ட கடிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை இப்பொழுது பார்ப்போம்.

"..... சிவகங்கை மன்னருக்கு நெருங்கிய உறவினர் என்ற முறையில் மன்னர் முத்துவடுகநாதர், தமது பெண்ணை எனக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்து, என்னை அவரது வாரிசாகவும் நியமனம் செய்தார். காளையார் கோவில் போரில் முத்து வடுகநாதர் மடிந்தவுடன் பெரிய ராணியுடன் நானும் ஓடிப்போய் ஹைதர் அலியின் சீமையில் தஞ்சம் புகுந்தோம். பின்னர் என்னை அவர்கள் (பிரதானிகள்) வரவழைத்து, காளையார் கோவிலில், முக்கியமான குடிமக்கள் மற்றும் பிரதான நாட்டு தலைவர்கள் (சேர்வைக்காரர்கள்) முன்னிலையில், ஏனைய பார்வையாளர்கள் மத்தியில் என்னை சிம்மாசனத்தில் அமரச் செய்து எனது அதிகாரத்தை அங்கீகரிக்கும் முறையாக கூப்பிய கரங்களுடன் என் முன்னர் தெண்டனிட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு நான்கு மாதங்கள் கழித்த பின்னர் எனக்கும் மருதிருவருக்குமிடையில் கருத்து வேறுபாடுகள் எழுந்தன. திடீரென்று அவர்கள் என்னையும் எனது நண்பர்களையும் கைது செய்து சிறையிலிட்டனர். எனக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டு இருந்த பெண்ணை (சிவகங்கை இளவரசியை) எந்த வகையிலும் எங்களுக்குச் சொந்தமில்லாத, தகுதியில்லாத சக்கந்தி மறவர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். சிறிது காலத்தில் அந்தப் பெண் இறந்தவுடன், அவர்கள் முறையே தங்களது பெண்களில் ஒருவரை அவருக்கு மணம் புரிந்தது அவரது அதிகாரத்தை ஓரளவு மதித்தவர்களாக, அவர்களே முன்னைப் போல்ஆட்சி செய்தனர். பிறகு அவர்கள் என்னைக் கொன்று விடுவதற்கு முடிவு செய்தார்கள். அதிர்ஷ்டவசமாக அங்கியிருந்து தப்பி ஓடிவந்து கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக அறந்தாங்கியில் வாழ்ந்து வருகிறேன்."

இந்த மடலின் வாசகத்திலிருந்து சின்ன ராஜா, வேங்கண் பெரிய உடையாத்தேவர் அல்ல. அவர் படைமாத்துர் கெளரி வல்லப ஒய்யாத் தேவர் என்பதும் வேங்கண் விருபாட்சி சென்றது பற்றி ஆசிரியர்