பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


குறிப்பிட்டிருப்பது அவரது சொந்த கற்பனை என்பதும் புலனாகிறது.

பக்கம் 102

"....முல்லையூரில் பிறந்து. ராணி அகிலாண்டேசுவரி நாச்சியாருடன் இராமநாதபுரம் விட்டு சிவகங்கைக்கு அமைச்சராக வந்து, வாழ்நாளெல்லாம் சிவகங்கையின் வளர்ச்சிக்குத் தொல்லைகள் ஏற்ற அவர். விருபாட்சியில் மறைந்தார்.'

அகிலாண்டேசுவரி நாச்சியாரைத் திருமணம் செய்த சசிவர்ண பெரிய உடையாத் தேவர், நாலுகோட்டை திரும்பும் பொழுது, அவருக்கு உதவியாக இருப்பதற்கு சேதுபதி மன்னர்தாண்டவராய பிள்ளையையும் அனுப்பி வைத்தார் என்ற சிவகங்கை அம்மானையின் செய்தியை அரிச்சந்திர வாக்காகக் கருதி நூலாசிரியர் மேலே கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். பிரதானி தாண்டவராயபிள்ளை இராமநாதபுரம் சேதுபதி மன்னரது பணியில் இருந்து அகிலாண்டேசுவரி நாச்சியாருடன் சிவகங்கை வந்தது உண்மைதானா என்பதைப் பார்ப்போம்.

பிரதானி தாண்டவராயபிள்ளை மீது குழந்தைக் கவிராயர் என்பவர் மான்விடு தூது என்ற சிற்றிலக்கியமொன்றைப் பாடியுள்ளார். (டாக்டர் உ.வே.சாமிநாதையர் பதிப்பு. 1954) இதில் பாட்டுடைத் தலைவனைப் போற்றப்படும் தசாங்கத்தில்

".... விரிந்த மணிக்
கூடமும் மேல்வீடும் கோபுரமும் மாமறுகும்
மாடமும் சேர் தென்முல்லை நகரான்.” (கன்னி.88)

என தாண்டவராய பிள்ளையின் ஊரைக் கவிராயர் குறிப்பிடுகிறார். மேலும் இந்த நூலின் பதிப்புரையில் டாக்டர் உ.வே. சாமிநாதைய்யர் அவர்கள் "இன்றைக்கு 230 வருடர்களுக்கு முன்னர் (கி.பி.1725-ல்) கார் காத்த வேளாளர் குலத்தில் காத்தவராய பிள்ளை என்பவருக்குப் புதல்வராகப் பிறந்தார். (தாண்டவராயபிள்ளை) இவருடைய ஊர் முல்லையூர் என்பது. இவருடைய பரம்பரையினர் கணக்கெழுதும் உத்தியோகமுடையவர்கள்' என்றும் குறிப்பிடுகிறார்.

வருவாய்த்துறை ஆவணங்களைப் பரிசீலனை செய்ததில் முல்லையூர் என்பது சிவகங்கை வட்டம் அரளிக் கோட்டைப் பகுதியில் உள்ள முல்லைக் குளம் என்ற இனாம் கிராமம் என்பது தெரிய வருகிறது. கள ஆய்வின் பொழுது அரளிக் கோட்டையில் இன்னும் பிரதானி தாண்டவராய பிள்ளையின் வழியினர் இருந்து வருவதும் தெரிய வந்தது. அத்துடன், அவர்களில் ஒருவரான திரு. இராமச்சந்திர பிள்ளை என்பவர் (தற்பொழுது சென்னையில் இருப்பவர்) வசம் ஒரு செப்பேடும் இருப்பது தெரிய வந்தது. இந்த செப்பேட்டின்படி (இணைப்பில்