பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


தோப்பாபணாம் என்றே வழங்கி வந்தனர். ஆதலால் வெள்ளை மருது சேர்வைக்காரர்.தமது மைத்துனர் மகன் வீரபாண்டியனுக்கு அன்பளிப்பாக வழங்கி சிறப்பு செய்திருந்தால், அந்தப் பணம் அப்பொழுது சிவகங்கை சீமையில் செலாவணியில் இருந்த ஸ்டார் பக்கோடா அல்லது குளிச்சக்கரம் அல்லது போட்டோ நோவோ பக்கோடா - இவைகளில் ஏதாவது ஒரு வகை நாணயத்தில் தான் கொடுத்திருக்க வேண்டும்.[1] அதற்கு மாறாக தோப்பா பணத்தை கொடுத்து அபிமானிச்சதாக குறிப்பிட்டு இருப்பது பொருத்தமற்றதாக உள்ளது.

விருபாச்சி பாளையக்காரராக கி.பி.1762 முதல் 181 வரை இருந்தவர் திருமலை குப்பல் சின்னப்ப நாயக்கர். (19வது பட்டத்துக்காரர்) என்பதை பாளையபட்டு வமிசாவழி குறிப்பிடுகிறது[2] கும்பினியாரின் ஆவணங்களும் இந்த பாளையக்காரரை கோபால நாயக்கர் என குறித்துள்ளன. ஆனால் இந்த செப்பேடு, அந்த பாளையக்காரரை 'கஜபூதி’ என (வரி 19) குறிப்பிட்டிருப்பது வரலாற்றுக்கு முரணாக உள்ளது.

மேலும், வரிகள் 20-24ல் 1800-ம் வருவும் கம்பளத்தார் நாயக்கன் வசம் பொன்னையம்மா, வெள்ளையம்மா நாமாச்சியம்மாள், வேலைக்கா ஆகியவர்கள் 'கனம் பொருந்திய கும்பினியான் துரை கைது செய்து கடாட்சம் வரும்படி சொன்னதின் பேரில் - மேற்படியாளர்களை மீட்டு வந்ததற்காக" என்ற வாசகம் காணப்படுகிறது. இதில் அடங்கிய செய்தி அந்த நான்கு பெண்களையும் கும்பெனியார் விருப்பப்படி விருபாட்சியில் இருந்து கைப்பற்றி வரப்பெற்றது என்பதுதான். ஆனால் திருமனோகரன் 'மீட்டு' என்ற வார்த்தையினைக் கொண்டு கும்பினியாரினால் விருபாட்சி அரண்மனையில் இருந்த அந்த பெண்மக்களை, வீரபாண்டிய சேர்வைக்காரர் மீட்டு வந்து உரியவர்களிடம் சேர்ப்பித்தார் என வரைந்துள்ளது பொருத்தமானதாக இல்லை. இந்த நான்கு பெண்களது பெயர்களும் விருபாட்சி கைபீதியில் குறிப்பிடப்பட்டு இருப்பதுடன் திண்டுக்கல் மலைக்கோட்டையில் பரங்கியர் பாதுகாப்பில் இருந்து வந்தனர் என்றும் நாமாச்சியம்மாள் தவிர ஏனைய பெண்கள் கும்பினியார் தயவினாலே கைவிட்டு அவரவர் இருப்பிடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் நாமாச்சியம்மாளும் இன்னும் ஐவரும் கி.பி. 1815 செப்டம்பர் வரை கைதுலே இருந்து' என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதலால் அவர்களை மீட்டு வந்ததற்கான ஆதாரமும் மருதுபாண்டியர் பற்றிய ஆவணங்களில் இல்லை. மற்றும் செப்பேடு வரி 22-ல் 'கனம் பொருந்திய கும்பினியான் துரை' என


  1. Military Consultations Vol.285(A) / 11.6.1801 Page: 5051-52
  2. பாளையப்பட்டு வமிசாவழி (தொகுதி II) பக்: 24, 26, 28, 54, 102, 182