பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 231


கண்டிருப்பது ஓலை முறியில் இருந்து பட்டயத்தை பெயர்த்து எழுதியவரது தவறு போல திரு. மனோகரன் வரைந்துள்ளார். அவரது கூற்றுப்படியே அந்தப் பெண்கள் கொண்டுவரப்பெற்றதை ஏற்றுக்கொண்டாலும், 'கனம் பொருந்திய கும்பினியான் துரை' என்ற தொடருக்கு என்ன பொருள் கொள்வது? ஆங்கிலேயரை எதிர்த்த மருதுபாண்டியரது பட்டயத்தில் ஆங்கிலேயரை இவ்விதம் மிகுந்த மரியாதையுடன் குறித்து இருப்பது புதுமையானது அல்ல.

ஆதலால் மருதுபாண்டியர்களை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தல் பட்டயத்தை மட்டும் அல்லாமல் அதனுடைய பின்னணியையும் புரிந்து கொள்வதற்கு உதவும். அதற்கு மருதுபாண்டியர்கள் ஆங்கிலேயரை எப்பொழுது, எந்தச் சூழ்நிலையில் எதிர்த்தனர் என்பதை புரிந்து கொண்டால் பயனுடையதாக இருக்கும் என நினைக்கின்றேன். மருதுபாண்டியர்கள் கி.பி.1780 முதல் 1801 வரை சிவகங்கை சீமையின் பிரதானிகளாக இருந்து வந்தனர். அப்பொழுது அவர்களும் தென்னாட்டில் இருந்த ஏனைய பாளையக்காரர்களைப் போன்று குறிப்பாக மணியாச்சி, மேலமாந்தை சொக்கன்பட்டி, எட்டயபுரம். புதுக்கோட்டை போன்ற பாளையக்காரர்களை போன்று - கும்பினியாரது விசுவாசமிக்க பாளையக்காரர்களாகவே இருந்து வந்தனர் என்பதை அவர்கள் 8.7.1794, 4.2.1801, 13.6.1801, 31.7.1801ஆகிய தேதிகளில் எழுதிய கடிதங்களிலிருந்து தெரிய வருகிறது. 16.6.1801-ம் தேதி அன்றுதான் பரங்கியருக்கு எதிராக வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகுதான் அவர்கள் கும்பினியாரது பகிரங்க எதிரிகளாக இருந்தனர் என்பதை வரலாற்றில் காணமுடிகிறது. ஆதலால் இந்தச் செப்பேடும் ஜூன் 1801க்கு முன்னதாக வரையப்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவு.

மற்றும் விருபாட்சி பாளையத்தைப் பற்றிய ஒருசில விவரங்களையும் இங்கு தெரிவிக்க விழைகிறேன். 25.6.1772 அன்று சிவகங்கை மன்னர் காளையார் கோவில் போரில் இறந்துபட்டவுடன் அவரது பிரதானி தாண்டவராயபிள்ளை ராணி வேலுநாச்சியாரையும், அவரது பெண் குழந்தையையும் சிவகங்கை சீமைக்கு வடமேற்கே உள்ள விருபாட்சிக்கு அழைத்துச் சென்று [1] அரசியல் புகலிடம் பெற்றார். அப்பொழுது விருபாட்சி மைசூர் சீமையின் ஏனைய பாளையங்களை போன்று, அமைதியாக இருந்தது. கி.பி.1792 மைசூர் மன்னர் திப்புசுல்தானது மங்களுர் உடன்படிக்கையின்படி விருபாட்சியைக் கொண்ட திண்டுக்கல் சீமையை ஆங்கிலேயர் தங்களது சொத்தாக மாற்றினார். அதனை அடுத்து அங்குள்ள பாளையக்காரர்தலைமையில் கி.பி.1794-க்கு பிறந்தான். அங்கு வெள்ளையர் எதிர்ப்பு கிளர்ச்சிகள் துவங்கின. முன்னால் மைசூர்


  1. Rajayyan. Dr. K. – History of Madura (1974) P: 261 Military Country Correspondence Vol.2:1. 16.12.1772. P: 202