பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 241


இதனால் கோபமுற்ற சேதுபதி மன்னர் சேதுநாட்டின் வழியாகத் தொண்டி செல்லும் வாணிகச் சாத்துக்களின் வழியை மாற்றியமைத்து சிவகங்கைக்கு பட்டநல்லூர் (தற்பொழுதைய பார்த்திபனூர்) சுங்கச் சாவடி மூலமாக கிடைத்த வருவாயை இழக்குமாறு செய்தது. இதற்கு பதிலடியாக சிவகங்கைப் பிரதானிகள் சிவகங்சை சீமையைக் கடந்து சேதுபதி சீமைக்குள் செல்லும் ஆற்றுக்கால்களை அடைத்து சேதுபதி சீமையின் வேளாண்மைக்கு ஆற்றுநீர் கிடைக்காமல் செய்தது.

இன்னும் இராமநாதபுரம், சிவகங்கைச் சீமைகளின் எல்லைகளில் நடைபெற்ற கால்நடை திருட்டு, தானியக் கதிர்கள் திருட்டு என்ற பல தொல்லைகள் இரு நாடுகளது அரசியல் உறவுகளுக்கு குந்தகம் விளைவித்தன என்பதுதான் வரலாறு வழங்கும் உண்மையாக உள்ளது. சூர்ப்பனகை நாடக சூழ்ச்சி அல்ல.

பக்கம்: 220

'... சாசனத்தின் ஆண்டு கி.பி.1783 எனக் குறிப்பிட்டு இருப்பதால், கி.பி. 1772-ல் காலமான முத்து வடுக நாதரால் வழங்கப்பட்டிருக்க முடியாதென்பதும். கி.பி.1780 - 1801 வரை ஆட்சி பொறுப்பில் இருந்த மருதுபாண்டியர்களாலேயே வழங்கப்பட்டதென்பதும் உறுதியாகிறது."

பக்கம் 289

'கி.பி.1794 சூடியூர் சத்திரத்திற்கு அதன் அக்தார் வெங்கடேசுவர அவதானிக்கு கிராமங்கள் அளித்து முத்து வடுகநாத பெரிய உடையாத் தேவர் வழங்கியதாகக் குறிப்பிடும் செப்புச்சாசனம்.'

மருது இருவர் மன்னரே என்று நூலாசிரியது நிலையை உறுதிப்படுத்த குறிப்பிடப்பட்டுள்ள பதினோரு தொல்லியல் சாசனங்களில் இரண்டைப்பற்றித்தான், மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு சாசனங்களும் இவை அவரது கருத்துக்கு நேர்மாறான, வலுவான, சான்றுகள் ஆகும் என்பதை அவர் அறியவில்லை. காரணம் அவருக்கு கல்வெட்டு, செப்பு சாசனம் ஆகியவைகளைப் படித்தறியும் வாய்ப்பு இல்லை போலும்!

இந்த சாசனங்கள் முறையே கி.பி.1783-லும், 1794-லும் வழங்கப்பட்டவை. வழங்கியவர் சிவகங்கை மன்னர் விசைய ரகுநாதப் பெரிய உடையாத் தேவர் என்று இந்தச் செப்பு பட்டயங்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. (பக்கம் 133 பார்க்க) அப்படியிருந்ததும் “கி.பி.1772-ல் காலமான முத்து வடுகநாதத் தேவரால் வழங்கப்பட்டிருக்க முடியாது என்றும், இந்த அறக்கொடைகள் மருது பாண்டியர்களால் வழங்கப்பட்டது” என்றும் நாலாசிரியர் முடிவு