இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 307
1780 | நவாப்பின் ஆக்கிரமிப்பில் இருந்து சிவகெங்கையை ராணி வேலு நாச்சியார் மீட்டு மீண்டும் தன்னரசு ஆட்சியை ஏற்படுத்தியது. நவாப்பும் கும்பெனியாரும் புதிய சிவகெங்கை அரசை அங்கீகரித்தது. | |
1783 | நவாப்பிற்கு பேஷ்குஷ் தொகையை வசூலிக்க கும்பெனிபடை தளபதி புல்லர்டன் தலைமையில் சிவகெங்கை வருதல் (4.8.1783). | |
1785. | ஐதர் அலியின் படையெடுப்பினால் தான்யக் களஞ்சியமான தஞ்சாவூர் சீமை சீரழிந்ததால் சிவகெங்கைச் சீமையில் இருந்து 12,000 கலம் அரிசி 1000 பொதி வண்டிகளில் தஞ்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. | |
1789. | சின்ன மருது சேர்வைக்காரது சிவகெங்கைக் கோட்டை முற்றுகையை கும்பெனியாரது தளபதி ஸ்டுவர்டு முறியடித்து திண்டுக்கல் சீமைக்குள் பின் வாங்கும்படி முறியடித்தது. | |
ஆற்காடு நவாப்பும் கும்பெனி கவர்னரும் மருது சேர்வைக்காரர்களுடன் சமரசம் செய்து ராணி வேலுநாச்சியாரை பதவி விலகச் செய்தது. சக்கந்தி வேங்கன் பெரிய உடையாத்தேவர் சிவகெங்கை மன்னர் ஆதல். | ||
1790. | திருப்புவனம் கோட்டையை சிவகெங்கை அரசுக்கு ஆற்காடு நவாப் திருப்பி அளித்தல். | |
1792. | ராணி வெள்ளச்சி நாச்சியார் மரணம். | |
1763. | மதுரை ஆளுநர் கம்மந்தான் கான்சாகிபு திருப்புவனம் கோட்டையை தாக்கி சேதப்படுத்தியது. | |
1794. | சிவகெங்கை சீமை முழுவதும் வறட்சியில் சிக்கியது. சிவகெங்கை இராமநாதபுரம் சீமைகளது எல்லைகளில் சிறுசிறு தகராறுகள். விசவனூர் ஆனந்தார் ஆகிய ஊர்களில் இரு சீமைப்படைகளும் மோதியது. | |
1796. | ராணி வேலு நாச்சியார் மரணம். | |
1799. | பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கட்டபொம்முவும் பிரதானி மருது சேர்வைக்காரர்களும் பழமானேரியில் சந்தித்தல். | |
சிவகெங்கைப் படையணிகள் மறவாழ் கிளர்ச்சிக்காரர்களது கமுதி முற்றுகையில் கும்பெனி | ||