பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 23

வாணியேந்தல் (அமராவதி வட்டம்) சுப்பு ஐயன், தர்மாசனம்
உம்மாங்கல் லட்சுமண ஐயங்கார், தர்மாசனம்
தெ.புதுக்கோட்டை சுப்பு ஐயர், லெட்சுமி அம்மாள், தர்மாசனம்
1741 கருவேலகுறிச்சி செங்கமடை அனுமந்தராயன் சேரி அழகிரி சாஸ்திரி
ஆச்சனக்குடி ஊழியமான்யம்
பாரூர் ஒடை முத்துகுமரா பிள்ளை, இனாம்
1742 பெருஞ்சானி சாமா பாப்பன் ஏந்தல் (மங்கலம் வட்டம்) குப்பன் செட்டியார், ஜீவிதம் ஊழியர் மான்யம்
1743 உதாரப்புளி (மங்கலம் வட்டம்) தர்மாசனம்
1745 அலவன்குளம் செங்குளம் சொக்கநாதப்புலவர், ஜீவிதம் சீனிவாச சாரியார், அழகிரி ஐயங்கார், (மானாமதுரை)
பள்ளிச்சேரி (மங்கலம் வட்டம்) பெருமாள் ஐயர், ஜீவிதம்
நத்தை பொறுக்கி சீனிவாச ஐயங்கார், தர்மாசனம்
1746 காடன் ஏந்தல் பன்னீர்க்குளம் பரமசாஸ்திரி, தர்மாசனம் தர்மாசனம்
1747 செந்தட்டி ஏந்தல் (மாறநாடு) ஊழியமான்யம்
கமுதக்குடி சோலையார் இராமலிங்க சுவாமிகள்
ஏந்தல் (பார்த்திபனுர் வட்டம்) வரிசை ஏந்தல் (மாறநாடு வட்டம்) திருவேங்கடத்தய்யர், தர்மாசனம் தர்மாசனம்.
சாமடை இருப்பன் ஏந்தல் (மங்கலம் வட்டம்) விசுவநாத ஐயர், தர்மாசனம்
1748 வாகைக்குளம் கங்கை கொண்ட ஏந்தல், பாவயன் ஏந்தல், சிறுவாணி வயிரமுடி ஏந்தல், சின்ன கொண்டுமுடி கருப்பஞ்செட்டி வகை, இனாம் அழகர் ஐயங்கார், இனாம் அண்ணாசாமி ஐயங்கார், இனாம் வேங்கட முத்து ஐயர், ஊழியம்.


இந்த அறக்கொடைகளை வழங்குவதில் அக்கறை கொண்டிருந்த மன்னர் சசிவர்ணத் தேவரைப் போல் அவரது அரசமாதேவியான அகிலாண்ட ஈசுவரி நாச்சியாரும் மிக்க ஆர்வத்துடன் இருந்து வந்தார். இராமநாதபுரம் சேதுபதி மன்னரது புதல்வியார் என்ற வகையில் சேதுபதி மன்னர்களது அரச பிராட்டிகளுக்குரிய ஆன்மிகப் பிடிப்பு, இவருக்கும் இருந்தது என்பதை அவரது பெயரால் வழங்கப்பட்ட கீழ்க்கண்ட அறக்கொடைகளில் இருந்து அறிய முடிகிறது.