பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

56. ண்டிபுரம் குளக்காலுக்கு மேற்கு நெடு ஊரணி
57. த் தென் கடக் கொம்புக்கு தெற்கு இன்னாங்
58. கெல்ன்ககி யுள்ப்பட்ட திட்டு
59. திடல் நஞ்சை புஞ்சை மேல் னோக்கிய மரம்
60. கீள் னோக்கிய கிணறு வருதீபனாட செபம்மசிலது
61. வடாசானம் சகல சமுதாய பிராத்தியும் அதி
62. சந்திறாக்கமும் புத்திர பவுத்திர பவுத்திர பாரம்பரி
63. யமாக சாமி சன்னதியழுக்கு பூசை நெய்வேதி
64. ணம் பண்ணிக்கொண்டு சுகத்திலே இருப்பா
65. றாகவும் இந்த தற்மத்தை பரிபாலணம் பண்
66. ரிைக் கொண்டு வந்த பேர்கள் காசியிலேயும்
67. ராமேசுபரத்திலேயும் கோடி சிவலிங்க பிறதிஷ்
68. ட்டையும் கோடி விறும்ம பிறதிஷ்ட்டையும் பண்
69. ணரின பலனை யடைவார்றாகவும் இதுக்கு யா
70. தாமொருதன் அகிதம் பண்ணினவன் கா
71. சியிலே காறாம் பசுவையும், குருவையும் வ
72. தை பண்ணின்ன தோசத்தில் போகக் கடவ
73. ரறாகவும் இந்த தற்மசாதனம் எழுதினே
74. ன் விசுவனாசாரி குமாரன் வீரபத்திர ஆ.
75. சாரியென் உ. தாநபாலநயோர் மத்யே
76. தாநாத் சிரேயோதுபாலநம் தாநாத் ஸ்வர்க்க
77 ம் அவாப்நோதி பாலநாத் அச்சுதம் பத
78 ம் ஸ்வதத்தாத் த்விகுணம் புண்யம் பரதத்தா
79. நபாலநலம் பரதத்தாபஹாரேன
80. ஸ்வத நிஷ்பலம் பவேத்

3. இமயனீசுரம் செப்பேடு

சிதம்பரத்தில் இருந்து இயமனிசுவரத்துக்கு வருகை தந்த சத்தியவாசக சுவாமியார் அவர்களை, அங்கு மடம் உண்டு பண்ணிவித்து, அந்த மடத்தைப் பராமரிக்க மன்னர் சசிவர்ண பெரிய உடையாத் தேவர் அவர்கள், 26.11.1734 தேதியன்று அந்த வட்டாரத்தில் உள்ள நஞ்சை நிலங்களை தான சாதனமாக வழங்கியுள்ளதை அறிவிக்கும் பட்டயம் இது.

தடாதகை நாடு என்ற உட்பிரிவும், இளையான்குடி பெரியகண்மாய் தாமரைமடை, பகையறவென்றான் ஏந்தல், செட்டி ஊரணி, அருணையூர் குளக்கால், சாக்காரையில் நீர்த்தாவு, கல்லூரணி ஏந்தல் ஆகிய நீர் ஆதாரங்களும் அவைகளின் எல்லைகளும் இந்த செப்பேட்டில் குறிப்பிட்டு இருப்பது ஆய்வாளர்களுக்கு அரிய செய்தியாகும். இந்தச் செப்பேடு சென்னை அரசு அருங்காட்சியகத்தில் உள்ளது.