பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

முடேமியா - விஜயகுமாரனை கொல்ல முயன்றபொழுது அவர் மீண்டும் தப்பி சிவகங்கையில் தஞ்சம் பெற்றார்.[1]

இதற்கிடையில் ஆற்காடு நவாப் ஆகிவிட்ட சந்தாசாகிபுக்கும் அன்வர்தீன் மகன் வாலாஜா முகமது அலிக்கும், இடையில் நடைபெற்ற போர்களின் இறுதிக் கட்டமாக பி.பி. 1751ல் திருச்சி கோட்டைப் போர் ஏற்பட்டது. ஏற்கனவே மைசூர் மன்னரது திவான் நஞ்ச ராஜாவுக்கு விட்டு கொடுத்திருந்ததை ஒட்டி மைசூர் படைகள் மதுரையைக் கைப்பற்றின. கூப் சாகிப் என்ற அவரது தளபதியின் தலைமையில் நிலையற்ற மதுரையின் நிலை அண்மையிலிருந்த சிவகங்கை அரசுக்கு பெருத்த மனக் கவலையை அளித்தது. மதுரைக்கு ஆபத்து என்பது தென்பாண்டிய நாடு முழுமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதை உணர்ந்து இருந்த மறவர் சீமை மன்னர்கள், தக்க ஆலோசனைக்குப் பிறகு தங்களது பிரதானிகள் வெள்ளையன் சேர்வையையும், தாண்டவராய பிள்ளையையும் படைகளுடன் மதுரைக்கு அனுப்பி வைத்தனர். மறவர்கள் மதுரைக் கோட்டையைச் சூழ்ந்து தாக்கி, தளபதி கூப் சாகிபை முறியடித்தனர். மதுரையின் மன்னராக விஜய குமாரனுக்கு மீண்டும் முடிசூட்டித் திரும்பினர்.[2] சில மாதங்களில் மறவர் படை தங்களது சீமைக்கு திரும்பிச் சென்றவுடன், மயானா என்ற மதுரைத் தளபதி, மதுரையை மீண்டும் பிடித்துக் கொண்டார். உடலுறுதியும் உள்ளத்துணிவும் இல்லாத விஜய குமாரன் மீண்டு சிவகங்கைக்கே ஒடி வந்தார்.[3] மறவர் படை மீண்டும் சென்று மதுரையை கைப்பற்றியது என்றாலும், அவர்களது கட்டுப்பாட்டில் கோட்டையை வைத்து இருந்துவிட்டு தளபதி மயானா என்பவர் பொறுப்பில் விட்டுத் திரும்பினர்.[4]

இதற்கிடையில், தமிழக அரசியலின் மிக முக்கிய சதுரங்கக் களமாக திருச்சி மாறியது. திருச்சி கோட்டையைப் பிடிக்க பிரெஞ்சுக்காரர் உதவியுடன் சந்தாசாகிபு முயன்றார். எதிர்அணியான வாலாஜாமுகம்மது அலிக்கு ஆங்கிலேயர் உதவியுடன் மைசூர் திவான் நஞ்சராஜா ஏராளமான பொன்னும் பொருளும் படை உதவியும் அளித்தார். மேலும் தஞ்சை மன்னரது ஆதரவும், புதுக்கோட்டை தொண்டைமானது ஒத்துழைப்பும் வாலாஜாவிற்கு இருந்தது. இவர்கள் இருவரும் ஏற்கனவே சந்தாசாகிபின் தாக்குதலை அனுபவித்தவர்கள் அல்லவா?

ஏற்கனவே தமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மறவர் சீமை மன்னர்களை,


  1. Rajayyan Dr. K. – History of Madura (1974) P: 104
  2. Raja Rama Rao T. - Manual of Ramnad Samasthanam (1891) P: 241
  3. Rajayyan Dr. K. - History of Madura (1974) P: 144
  4. Hill, S.C. - Yosufkhan - The Rebel Commandant (1931) P: 26-41.