பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


சாய்த்து கும்பெனிப் படைகள் விரைந்து எளிதாக முன்னேறுவதற்குப் பாதைகளைச் செம்மைப்படுத்திக் கொடுத்தது.

மேலும், அமைதிப் பேச்சிற்கு உத்திரவாதம் அளித்த தளபதி ஜோஸப் சுமித், மேற்கேயிருந்து முன்னேறி வந்த தளபதி பான்ஜோருக்கு தமது அமைதி பேச்சுப் பற்றி தெரிவிக்காததால் அவரது அந்த அறிவிப்பு தளபதி பான்ஜோருக்கு சென்று. அடையாததால், அவர் தாக்குதலை தொடுத்துவிட்டார். அவருக்கு அளிக்கப்பட்டிருந்த உத்திரவு காளையார் கோவில் கோட்டையை மேற்குப் புறமாக வந்து சூழ்ந்து கொள்ள வேண்டும் என்பது தான், தமது மேல் அதிகாரியான ஜோஸப் சுமித்தின் முன் உத்திரவைப் பெறாமலேயே காளையார்கோவில் தாக்குதலை அவர் தொடுத்தது மறவர்களிடையே பெருங்குழப்பத்தை உண்டாக்கியது.

சிவகங்கை சீமை தோன்றியபிறகு, அந்த சீமையிலே நிகழ்ந்த முதல் போர் அது. போராட்ட உணர்வும், தாய்நாட்டுப் பற்றும் மிக்க தமிழக மறவர்களை, வெள்ளையரின் வெடி மருந்து திறன் கொண்டு அதுவரை அழித்து வந்த ஆற்காட்டு நவாப், கடைசியாகச் சந்தித்த வீரமறவர் அணி அது. அதுவும் சங்ககாலச் சிறப்பு வாய்ந்த கானப்பேரில் மதுரைப் பாண்டியன் பெரு வழுதி தன்னை ஒரு சேரப் பொருதிய, வளவனையும் பொறையனையும் அழித்து புறமுதுகிட செய்த புனித பூமி. ஆதலால் அந்த மண்ணின் மாண்பையும், மரபுவழிப் பெருமையையும் நிலை நிறுத்த அங்கு மறவர் போரிட்டனர்.

"பகை எனில் கூற்றம்வரினும் தொலையான்' என்ற புலவர் கூற்றுக்கு மாறுபடாமல், பகைவர்களைக் கூற்றுவனுக்கு இரையாகக் கொடுத்ததுடன் தங்களையும் பொன்றாத புகழுக்கு உரியவர்களாக்கி உயிர் துறந்தனர். பகைவர்கள் வெற்றி பெற்றனர். படுகொலை, பகல் கொள்ளை. மன்னர் முத்துவடுக நாதரும் படுகளத்தில் குண்டு பாய்ந்து தியாகியானார். அதுவரை ஆற்காட்டு நவாப், பாளையக்காரர். குறுநில மன்னர்கள் மீது போர் தொடுத்த போது, அவர்கள் நவாப்பிடம் சரணடைந்தனர். நெற்கட்டும்.செவ்வல் பூலித்தேவர் உடையார் பாளையம் பாளையக்காரர் போன்றவர்கள் நவாப்பிடம் தோல்வியுற்றனர். ஒடி ஒளிந்தனர். எதிரியின் கைகளில் படாதவாறு ஒடி ஒளிந்து மறைந்தனர். மாவீரன் கான்சாகிபு போன்றவர்களை தோற்கடிக்கப்பட முடியாத நிலையில் துரோகிகள் மூலம் கைப்பற்றி அவர்களை தாக்கு கயிற்றில் தொங்கவிட்டனர். ஆனால் சிவகங்கைப் போர்க் களத்தில் அவர்களை நேருக்கு நேர் சந்தித்து போரிட்ட மன்னர் முத்து வடுக நாதர் வீழ்த்தப்பட்டார்.[1] இந்திய விடுதலை வரலாற்றில்


  1. Military Consultations Vol. 42/1.7.1772. P: 442.