102 விட்டார். முகம்மதுவின் சூழ்ச்சியை, மாயமந்திரத்தை வெல்லும் திறம்பற்றார் ஆகிவிட்டார்" என்று கூறி, நபிகள் நாயகம் அவர்களை இகழ்ந்தும், உற்றரைப் புகழ்ந்தும் உரைத்தானாம் அபூஜஹில்! பாட்டிலுள்ள சொல், பொருள், ஓசை தயம் கருதி,இன்னும் ஒருமுறை பாடிப் பார்த்துக் கொள் வோம்- விதியின் முறையென்(று) அகுமதுதாம் விளக்கும் உரைகேட்(டு) உமறுகத்தாப் மதிமெய் மயங்கி வஞ்சனையின் மாயத்(து) உறைந்தார் எனஊரும் பதியும் பெருக்க உரைநடத்திப் பற்றார் இவரென்(று) அபூஜகல்தன் புதிய மொழியைத் தொல்கிளைக்குப் புகழ்ந்தான் நபியை இகழ்ந்தாளே இவ்வாறெல்லாம், தமது தோல்வியை மறைக்க, அபூஜஹில் உரை பகர்ந்தாலும், உள்ளுக்குள் நபிகள் நாயகம் அவர் களின் வளர்ச்சியைக் கண்டு அஞ்சினான். பெரும் வீரர் களாகிய ஹம்சாவும், உமறிப்பினுகத்தாபும், நபிகள் நாயகம் அவர்கள்பால் சென்று சேர்ந்து கொண்டமை, அபூஜஹிலை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கவேண்டும். எனவே, உத்பா என்கின்ற அறிவிற் சிறந்த இளைஞனை நாயகத் திருமேனி அவர்கள் பால் சந்துரைக்க அனுப்புகின்றான். உத்பா கற்றவன். பேச்சாற்றல் உடையவன். முன்புள்ள மூன்று வேதங்களையும் உணர்ந்தவன். இவன், நபிகள் நாயகம் அவர் களைச் சென்று சந்திக்கின்றான். "ஊருடன் ஒத்து வாழுகின்ற நெறிக்குப் புறம்பாக நீங்கள் நடக்கலாமா" என்று கேட் கின்றான். "நமது முன்னோர்களின் மார்க்கத்தை முனிந்து, பின்னுமோர் மார்க்கம் புகல்வது பெருமைக்குரியதா?" என்று வினாவிடுக்கின்றான். நீர், முன்னோர் வழியைப் பின்பற்றி நடந் தால், இந்த நாட்டின் அரசராக வாழலாம், அதற்காவன செய்கின்றோம் என்கின்றான்.
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/103
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை