106 அவ்வுரை யார்த்து, கதீஜாப்பிராட்டியார் கேட்டார்கள். கேட்ட நபிகள் நாயகம் அவர்கள், கதீஜாப்பிராட்டியாரின் வதனம் நோக்கி உரைக்கின்றார்கள். "அறிவுசார்ந்த வள்ளல் குவைலிது அவர்களின் குலச் செல்வியே! உயரிய நடத்தை யாலும், வணங்கும் மனத்தாலும், உன்னத பண்பாலும், வானவர்களும் போற்றும் தன்மையுடைய கதீஜாவே! எனது உயிரினும் மேலாக நான் நேசிக்கின்ற குணத்தரசியே! உனது கவலை என்னைக் காப்பாற்றி விடுமா? அளப்பரிய அன்புடைய ஆண்டவனின் காவல் கணப்போதும் நம்மை விட்டகலாது காத்து நிற்கின்றதென்பதை மறந்துவிட்டனையா? போகா திருப்பதினால் பிரச்சினை பிரச்சினை தீர்ந்துவிடுமா? தீர்ந்துவிடுமா? போக மறுப்ப தொன்றே, நமது கொள்கை பலமற்றதென ஆகிவிடாதா? நாம் ஏற்றிருக்கின்ற கொள்கை உண்மையானதென்றால், அதனை நாம் மனப்பூர்வமாக உறுதியுடன் ஏற்றிருக்கின்றோம் என்றால்,எந்நேரத்தில், எவ்விடத்தில், எச்சபையினிடையேயும் எடுத்தியம்பத் தயாராக இருக்க வேண்டாமா? அஞ்சுவது சுய நலமல்லவா?மேலும், நாம் எக்காரியத்திற்காக அனுப்பப்பட்டி ருக்கின்றோமோ, அக்காரியம் தடந்தேறும் முன்னம் நம்மை அனுப்பிய இறைவன், நம்மை அழைத்துக்கொண்டுவிடுவானா? அழைப்பேற்றுச் செல்லுமிடத்தே ஆயத்து நேர்ந்து, ஆயுள் முடிந்துவிட்டால், வந்த காரியம் முடிந்துவிட்டதென்று மகிழ்வு கொள்ள வேண்டியதுதானே? நாம் செல்வதால்; நமது கொள்கையை எடுத்து உரைப்பதால், நமக்கு நன்மையும் ஏற் படலாமல்லவா? ஏன், நம்பிக்கை இழக்க வேண்டும்? நான் சென்று வருவதே முறை. செல்லாதிருப்பது தீது. இதுபற்றி, இறைவனிடத்திலே கேட்கலாம். "என் கணவர் ஏற்றுச் செல் கின்ற காரியம், இறைவனே; உனக்கு உவப்பானதெனில், அதனை நீ வெற்றியாக்கித் தா" என்று, தொழுது, வணங்கி வேண்டலாம்" எனப் புகன்றார்கள் நபிகள் நாயகம் அவர்கள். அச்சமற்ற இவ்வரிய உபதேசத்தை உமறுப்புலவர், உரிய வகையிலே, அழகிய தமிழிலே, உள்ளத்தை ஈர்க்கின்ற இனிய சொற்களிலே, கவிதைகளாக வடித்துத் தருகின்றார்-,
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/107
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை