பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 மாய மழையினிடைப்பட்ட மண் கரையும்; சுட்ட ஓடு கரை யாது என்பது போன்று, யார் சொல்லியும் திருந்தா இயல்பின க்ஷன அபூஜஹில், ஹபீபாரசையும் முகம்மது தமது மந்திரத்தால் மயக்கி விட்டார் ணப் பேசினான். ஹபீபரசர் எகிய பின், நபிகள் நாயகம் அவர்களையும், அவர்கள் தம் தோழர்களையும் கொடுமையாகத் துன்புறுத்தலானான். சுமையா என்னும் ஏழை மாதை அவன் வதைத்துக் கொன்றான்; அம் மாதரசியின் மகளையும் கணவரையும் சித்திர வதை செய்து சாகடித்தான். பிலால் என்ற நீக்ரோ அடிமை, நபிகள் நாயகம் அவர்கள் தம் வழியில் ஆகி விட்டார் என் பதற்காக, தனது கை வலி காணுகின்ற வரை அடித்தான்; பிறரையும் கொண்டு அடிக்கப் பணித்தான். சுடு மணலிலே படுக்க வைத்தான். நெஞ்சில் பெரும் கல்லை ஏற்றி இடர்ப்பட வதைத்தான். ஹப்பாப் என்பவரை நெருப்புக் கங்குகள் மீது கிடத்தினான்.எது செய்தும் மாற்ற முடியவில்லை. தமக்காகத் தமது தோழர்கள் படுகின்ற தொல்லையைக் கண்டு சகியாத நபிகள் நாயகம் அவர்கள், தமது தோழர்களை, ஆபிரிக்காக் கண்டத்திலுள்ள அபிசீனியா நாட்டிற்குக் குடிபெயர்ந்து சென்று வாழுமாறு பணித்தார்கள், நபிகள் நாயகம் அவர் களின் மகள் ருக்யா என்பவர்களும் அவர்கள் தம் கணவராகிய உதுமான் என்பவரும் அபிசீனியாவுக்குச் செல்வோருடன் அனுப்பப்பட்டார்கள். மிகத் துன்பமும், துயரமும், கஷ்டமும் அடைந்து தம் நாடு வந்துள்ள அவர்களை அபிசீனிய நாட்டு மன்னன் அன்புடன் வரவேற்று, ஆதரவளித்தார். தம் நாட் டில் வாழுமாறு அனுமதித்தார். சென்றோருக்கு அணிந்து கொள்ளக் கூடப் போதி ஆடைகளில்லை போலும்! மன்னன்