பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 எடுத்துரைத்தவை என்னினத்தவர்க்கு எடுத்து இயம்பி அடுத்து இரண்டொரு திளத்தில் நும்மிடத்தினில் அணுகி வடித்தவாய்மையில் ஒழுகுவன் மறைதெரி மதியோய் படித்தலம்புகழ் நகரினில் செலும்எனப் பகர்ந்தான். 'உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" என உரைப்பர் வடலூர் வள்ளல் ராம் லிங்கம். இந்த இப்னு அப்துயாவில், உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுகின்றான். அவன் தன் உரைகளே, மேலே கண்ட இரண்டு பாடல்களும், உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவதென்பதை, மதியில் வேறு வைத்து இசைந்திடும் சில மொழி வகுபபான் என்கின்றார் உமறுப்புலவர். பொய்யர் தம் உரையையும் மெய்யென நம்புவது மேலோர் பண்பு. நீங்கள் கூறுகின்ற புதிய மார்க்கநெறி எனக்கு ஏற்புடைத் தாக உளது. நீங்கள் உங்கள் ஊராகிய மக்கமா தமரினுக்குச் செல்லுங்கள். நான் என் ஊரவரைக் கலந்து கொண்டு இரண்டு நாட்களில் வந்து காணுகின்றனே” என்ற இப்னு அப்துயலில் என்பானின் நயவஞ்சல் உரையை நம்பி, விடை பெற்றுப்புறப்பட்டார்கள் நபிகள் நாயகம் அவர்கள். . அவர் கவை இந்தப் புறமாக அனுப்பிய அந்த நச்சு மனத்தான், வேறு புறமாகச் சென்று, ஊரின்கண் உள்ள காலிகளையும், சிறுவர் களையும் ஏவிவிட்டு, நபிகள்நாயகம் அவர்களைக் கற்களைக் கொண்டு அடிக்குமாறு செய்தான். இந்த இப்னுஅப்து யாலியை, ஆலகால விடத்தையும் பின்னடையச் செய்யும் கொடு மனத்தான் என்கின்றார் உமறுப்புலவர். இவன், சிறிய வர்க்கு இனியவை உரைத்து, பேதை நெஞ்சினரான காலிகளை "யும் தூண்டிவிட்ட போது கூறியதாகக் கீழ்வரும் பாட்டிளை உமறு யாத்துள்ளார். வெறியும்பித்தும் உற்றவன்இவன் பெருவழிவிடுத்து, ஓர் நெறியின் இடைத் தனிசென் றனன். அவள்தனை நேடி மறியும் கால்தலை தகர்ந்திட வலிய கல்லெடுத்து இட்டு எறியும்ஏகும் என்றுரைத்தனன் ஈரகிடை எரிவான்.