$19 ஊறுபட்டதின் வருத்தமும் பசியின்உள் உலைவும் மாறுபட்டவர் தொடர்ந்ததில் நடந்தமெய் மலைவும் பேறும்பட்டமும் தந்தவன் அருள்எனப் பெரிதின் தேறுபட்டு அவண் இருந்தனர்திருநபி இரசூல், இப்பாடலை,உமறுவின் பாடல் செய் பாங்கிற்கொரு எடுத்துக் காட்டெனலாம். மெய்வருந்த அமர்ந்திருந்த நபிகள் நாயகம் அவர்கள், 'மக்கத்தில் உள்ள அபூஜஹில் கூட்டமே இந்தத் தாயிப் நகர நயவஞ்சகர்களை விடமேல்'என எண்ணி இருப்பார் கள். அவ்வளவு கொடுந்தொல்லைக்கு ஆளாக்கி விட்டார்கள் தாயிப் நகர மாக்கள். ஆயினும் அவர்களை முனியாது, அனைத் தும் ஆண்டவன் செயல் என்று கொண்டு அமைதியுற்றிருந் தார்கள். அவர்களின் முன்னர், அமரர் [மீகாயில்] தோன்றினார். சலாம் உரைத்து நின்று, "தாங்கள் இடுகின்ற கட்டளையை நிறைவேற்றுமாறு இறைவன் என்னைப் பணித்தனுப்பியுள் ளான், யாது செய்யவேண்டும்?" எனக் கேட்டார். மௌனமாக இருந்தார்கள் போலும் நபிகள் நாயகம் அவர்கள். வந்த வானவரே பேசுகின்றார்-, அருந்தும் ஆரமுதக் கலிமாஉரைக்கு அடங்காது இருந்தஊர்எவை? பகைத்தவர்யாவர்? நும்இதயம் பொருந்திடாத் திசைாத்திசை? பொருவராக்கதிர்மெய் வருந்தல் செய்தவர்எவர்? தெரிதரவழங்கிடுமே! செப்பினீர்எனில் செறுநர்கள்திரளும் அத்திசையும் உப்புவாரியுள் அமிழ்த்துவன். அலதுஒரு வரையால் இப்பெரும்புவிக்குள் அரைத்திடுவென் எளியேன் துப்பு அறிந்திடவேண்டும் என்றுஇரவொடும் சொன்னார். நபிகள் நாயகம் அவர்களைத் துன்புறுத்தித் துயருறச் செய்த தாயிப் நகர மக்களை மட்டுமின்றி, நகரையே அழித்து விடு. கிறேன், ஆணையிடுங்கள் என வேண்டி நிற்கின்றார் வானவர். யாருக்கும் எவ்விதத் தீங்கும் எண்ணாத செய்யாத நபிகள் நாயகம் அவர்கள், தம்மைத் துன்புறுத்தியோரை 1
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/119
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை