பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 செய்கிறார். ஆனால் ஒப்பாய்வு தப்பாய்வு ஆகாமல் இருக்க மிகவும் எச்சரிக்கையாக இருப்பது பல்கலைக்கழகப் பி.எச்.டி.க் களும் கவனமாய்க் கருதத் தக்கது. ஒரு சான்று: கம்பர், ராமன் கையிலுள்ள அம்பு, சொல்லினும் கடிய வேகமுடையதென்பார். சொல் மனத்தில் தோன்றி வெளியில் வரவேண்டும். கம்பனின் பின்தோன்றலாகிய உயறுப்புலவர், அதனினும் சிறப்புறச் சொல்ல எண்ணு வது இயல்பு. எனவே, சொல் உதிப்பதற்குக் காண மாகிய மனத்தையே குதிரையின் வேகத்திற்கு உவம மாக்கியுள்ளார். இது உமறுப்புலவர் காலத்திலுள்ள புலவர்களின் புலமை வளர்ச்சியைக் காட்டுவதாகக் கொண்டு மகிழ இடமுண்டு. சிறந்த திறனாய்வாளரின் சீர்த்தி நூலாசிரியர் நுட்பமாகக் கூறுவதை அனைவரும் அறியத் திட்பமாக்குதல். ஒரு சான்று: மாதருக்கரசி ஆமினா வயிற்றினின்றும் வள்ளல் நபி அவர்கள் அவதரித்தார்கள் என்று கூறுகின்ற உமறுப் புலவர், முகம்மது தோன்றினார் எனப் பாடாமல், அகமது தோன்றினரன்றே எனப் பாடிப் போந்துள்ளார். இது அறியாமல் நேர்ந்த தவறன்று; அச்சுப் பிழையுமன்று. முகம்மது என்பது வள்ளல் மாநபி அவர்கட்கு இடப் பெற்ற பெயர். ஆனால் ஆமினாத் தாயார் தம் மகனை அன் பொழுக அழைத்த பெயர் அகமது என்பது. தாய்க்கு முதலிடம் அளிக்குமாறு உபதேசித்தவர்கள் வள்ளல் மாநபி அவர்கள். எனவே அவர்கள் பொன்மொழியை நினைவுகூரும் விதமாக ஆமினாத் தாயார் அழைத்த அகமது என்ற பெயர் என முதல் பாட்டில் டு மகிழ் வளிக்கின்றார் உமறுப்புலவர். ש கவிஞர் தம்முடைய உரை நூலில் சற்றொப்ப 150 சீறாப் புராணப் பாடல்களை விளக்கத்துடன் வெளியிட்டிருக்கும் அருமைப் பாட்டை ஓருந்தொறும் -ஓதுந்தொறும் - சீறாப்