பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 அழித்துவிட விரும்பவில்லை. அழிவு வேலைக்காக இறைவன் தம்மைப் படைத்தனுப்பவில்லை எனக் கூறுகின்றார்கள். தவ றிழைத்த மக்கள் திருந்துவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்கின்றார்கள். "ஒவ்வொருவரும், தமக்கு இடர் செய்வோரை அழித்துக் கொண்டே போனால், உலகில் பின்னர் எஞ்சியிருப் பவர் யாவர்?" எனப் பேசுகின்றார்கள். 'இவர்கள் திருந்தா விடினும், இவர்கள் மக்களாவது திருந்தலாமே! அழித்தால் என்ன வரும்?" என்கின்றார்கள். "நீங்கள் போகலாம்" என விடை கொடுத்தனுப்புகின்றர்கள். என்னே நபிகள் நாயகம் அவர்களின் கருணையுள்ளம்! உமறு பாடுகின்றார்-, 6.9 இறையவன் அருள்படிக்கு இடர்அடைந்தது என்னிடத்தில் குறையீதென்று, மானிலத்தவர் தமைக்குறைபடுத்தல் மறையின் நேரல்ல வெகுளியை மனத்தினில் அடக்கி நிறையில்நிற்பது பெரியவர்க்கு உரியநல்நிலையாம் இக்கணத்தில் நல்வழிப்படார்எனில் இவர்பயந்த மக்களாயினும் நல்வழிக்கு ஒழுகுவர்மறையும் திக்கு அடங்கலும் பரந்துதீண்நெறி முறைசெயுமே! வாளநாயகன் ஏவலுக்குஉரியவா! மகிழ்வில் யான்நினைத்திடும் போதினில்வருக இற்றையில்தும் தானம் மீதினில் செல்கஎன இசைத்தளர்நபியே! இத்தகு அற்புத மாமணியை, அருங்குணச் செம்மலை, கல்லா லடித்துக் காயமுறச் செய்த தாயிப் நகர மக்கள், இது நடந்த பத்தாண்டிற்குப் பின்னர், நபிகள் நாயகம் அவர்களின் கொள் கைகளை ஏற்ற குணசீலராயினர் என்பது வரலாறு. ஆனால், அப்போதைக்குத் தாயிப் நகர மக்களிடையே கல்லடிப்பட்ட கடுந்துயரோடு, மக்கமாநகரம் சென்று சேர்ந்தார்கள் நபிகள் நாயகம் அவர்கள். தாயிப் நகர மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தே திளைத்திருந்தார்கள். இனி நாம் சந்திக்க இருப்பது ஹிஜாத் காண்டம், அதன் இயல்பினை நுகர்வோமாக!