125 பொங்கியருதி சிதறிடத், துணிகள் புரன்தரப் புவியினில் வீழ்த்தி, நங்களை கடிவோம், கீர்த்தியை உலகில் நடத்துவோம் நறைதரும் புயத்தீர் என்றானாம் அபூஜஹில். அதாவது, மக்கமாநகரில் உள்ள கோத்திரங்கள் அனைத்திலும், கோத்திரத்திற்கொருவர் வீதம் ஆயுதங்களுடன் புறப்பட்டு, ஏக காலத்தில் முகம்மதுவின் மீது ஆயுதங்களைப் பாய்ச்சிக் கொன்று விடுவது, இதனால், தனிப்பட்ட எந்த ஒரு கோத்திரத்தார் மீதும் பழி வராது. என்று அபூஜஹில் பகர்ந்தானாம். கேட்ட அவன்தன் கூட்டம், ஆமாம் கூறி ஆதரித்ததில் வியப்பில்லை தானே? மட்டுமின்றி, 'அறிவினில் புத்திக் கூர்மையில் நம் தலைவருக்கு இணை யாருமே இல்லை" எனவும் மகிழ்ந்துரைத்தனராம். உமறு கூறுகின்றார், 36 அபூஜஹில் உரைத்த மொழிவழி துணிந்தங்கு அகங்குளிந்தனர் அனைவோரும் புவியினில்லவர்நின் சூழ்ச்சியை நிகர்ப்பர்! எனப் புகழ்ந்தது சவிமதின்மதீனா புகுமுனம் விரைந்தித் தந்திரம் முடித்திடும் என்றார். "காலம் கடத்தாமல் விரைவில் முடித்திடல் வேண்டும். தகைப வர் ஆணைபிறப்பித்ததும், கொலைவாளினுடன் அனைவரும் வந்து காரியத்தை வெற்றியாக முடித்து விடுகின்றோம்" எனக் கூறி, அபூஜஹிலை வாழ்த்திக் கலைந்து சென்றனர். இதன்பின் னர், ரபியுலவ்வல் மாதத்தில் வளர்பிறை ஐந்தாம் நாளில், அனைவரும் கூடுகின்றனர். இரவு பதினொரு மணிக்கெல்லாம் நிலவு மறைந்து இருள் பரவுகின்ற இரவு. நபிகள் நாயகம் அவர்கள் வீட்டினுள் இருக்கின்றார்கள், கோத்திரத்திற்கொரு வராக வந்து குழுமி, நபிகள் நாயகம் அவர்களைக் கொன் றெரிக்கின்ற நோக்கில், அவர்கள் தம் வீட்டினைச் சூழ்ந்து கொள்கின்ருர்கள். எழுந்து வெளியில் வகும்போது, அனைவரும்.
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/125
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை