பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 அவமானம் பின்னர் அழிவு. உடனடியாக அவமானம் அபூஜஹிலைப் பற்றுமாறு பணிக்கின்றான் வல்ல இறைவன். உமறு பாடுகின்றார்-, நபிமுகம் மதுவை. தீவினை இருளைத் துடைத்திடும் நறுஞ்சுடர் மணியை, கவலுதற்கரிய கொலைசெய நினைத்துக் காபிர்கள் வளைந்து அவன் இருப்பு, புவனமும் விசும்பும் செறிந்து இருன்படலம் போர்த்தது அவ்விரவினில் துயில் ஒன்று அவர் அவர் கருத்தும்கண்களும் மயங்கத் தலைகுழைத்து அசைப்பு வந்தடுத்த கடும் இருள் எங்கும் பரந்து கவ்விற்று. முகமமதைக் கொல்வேன் என வந்தோரின் கண்களைத் தூக்கம் தழுவிற்று. அனைவரும் தன்னை மறந்த நிலையில் தூங்கிப் போனார்கள்- அபூஜஹிலும்தான். கொல்வேன் என வந்தோர் அனை வரையும் நபி ஒருவரே கொன்று தீர்த்திருக்கலாம், அதுவும், அவர்கள் ஆயுதங்களைக் கொண்டே அவர்களைக் கொன்றிருக்க முடியும். அத்தகு தூக்கம், அவர்கள் தம் ஆழ்ந்த உறக்கத்தை, உமறு அழகிய பாட்டாக்கிக் காட்டுகின்றார். சாய்ந்து உடல்முடக்கிக்கிடப்பவர்சிலர், வான்தளை மறந்து அணிமுகம் முழந்தான் தோய்ந்திடத் துயின்ருேர்சிலர், உடல் நிமிர்த்துச் சுடர் இணைக் கருவிழி செருக மாய்ந்தவர் போலக்கிடந்தவர் சிலர், வெண்மணி இதழ்விரிப்ப, ஜம்புலனும் தேய்ந்து அறஒடுங்கிக் கிடந்தவர் எவரும்திருமளைப் புறந்தொறும் செதிக்தே! என்ன வியப்பு! கொல்லவந்த கூட்டத்தினர் செத்தொழித் ததே போன்று கால்மாடு தலை மாடாகத் தூங்கிக் கிடக்கின் ஞர்கள். அதுவும், சாய்ந்து உடல் முடங்கிக் கிடக்கின்றார்கள் சீ.பு.-8