பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 தாம் மட்டும் வாழ நினையாமல், தாரணி முற்றும் வாழ எண்ணி உழைத்த நபிகள் நாயகம் அவர்கள், தமது உற்ற தோழர் அபூபக்கர் சித்திக் அவர்களுடன் மலைக்குகையில் தங்கி இருக்கின்றார்கள். ஒளிக்கதிர் பரப்பி, உலகினை விழித் தெழ வைக்கின்றது காலையம்பருதி. நபிகள் நாயகம் அவர் களின் வீட்டின் முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் துயி லாழ்ந்து கிடந்த ஈனமதியான் அபூஜஹிலும், அவன் ஏவல் முடிக்கும் தோழர்களும் விழித்தெழுந்தனர். நபிகள் நாயகம் அவர்கள் வெளியேறிச் செல்லுங்கால் தூவிய மண், எழுந்தவர் தம் முகத்திலிருந்து இழிந்து உதட்டில் படிந்தது. பின்னர், அவர்கள் வாய் திறந்த போது வாயினுள்ளும் சென்றது. அபூஜஹில் தன் வாயில் பட்ட மண்ணைத் துடைத்துக் கொண்டே சொன்னான்: 'நம் அனைவர் வாயிலும் மண்ணைப் போட்டு விட்டு மாயக்கார முகம்மது தப்பிச் சென்று விட்டான், இனி அவன் தனது வேதத்தை ஒப்பி ஒழுகுகின்ற தோழர் களுடன் சென்று சேர்ந்து கொள்வான். அவன் கரம் வலுத்து விடும். அவன் நம்மைப் பகைப்பான். அவன் பகையை வெல்ல நம்மில் யாராலும் ஆகாது என்பதாக. அபூஹிலின் அவ்வுரை கேட்ட அவன் தோழர்கள், எதற்குமே ஆமாம் போடுவது போன்று, இதற்கும் ஆமாம் என்றனர். 'வீட்டி லுள்ள போதே பிடிக்க முடியவில்லை. வெளியேறிய பின்யா பிடிக்கமுடியும்? என மனத்துள் எண்ணிய அபூஜஹில், "இதற் குள் நெடுந்தொலைவு சென்றிருக்க முடியாது; சென்று தேடுங் கள்" என்று கூறி, முகத்தில் விழுந்த மண்ணைத் துடைத்த வனாகத் தனது இல்லம் நோக்கி நடந்தானாம் அபூஜஹில்; தானும் தேடுவான் போன்று.