134 எடுக்கும் உவர்மண் எடுத்தினத்தோர் எவர்வா யிடத்தும் புகுத்திக்குடி கெடுக்கும் படிக்குச் கெடுத்தெழுந்து கிளர்த்தும் தனது மறை நெறியின் அடுக்கும் அவர்கள் வயிள் அடைந்தான் அவனால், இனிமேல் நமதினத்தில் தொடுக்கும் பகையைத் துடைப்பவர்கள் இலைஎன்று இவையும் சொன்னானே இல்லுறைந்து இரவின் கண்ணோ இருந்தனன் கண்கட் டாக ஒல்லையில் புறத்தில் போர்தான் உறுதொலை கடந்தான் அன்று சொல்லருங் குவடும் காணும் சுற்றியே திரிவன் தேடிப் பல்லரும் எழுக என்றாள் திசைதிசைப் பறந்து போனார். பாடுறைந்து இல்புக் கோனைப் பற்றிலர் வீணில் முன்சார் காடிறந்து எவர்கள் காண்பார்? காண்பதும் அரிதுஎன்று எண்ணி ஈடிலாப் புகழ்சேர்வண்மை விறல்முகம் மதுவைத் தானும் தேடிய பெயர்கள் போலச் செல்லும்தன் திசையில் சென்றான். அபூஜஹில் தேடுவதில் பயனில்லை எனத் தெளிந்து, ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், தானும் தேடுவான் போன்று புறப்பட்டுத் தன் இல்லம் சென்று சேர்ந்தான். தீய வழியில் மக்களைத் தூண்டி விடுவோர், தாம் சென்ற பாதை தீதெனத் தெரிந்த பின்னரும், அதிலிருந்து விடுபட இயலா மல், அழிவாரோடு தாமும் சேர்ந்து அழிவர் என்பதற்கு
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/134
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை