136 டுமே! அறுபடாதிருப்பதிலிருந்து தெரியவில்லையா, உள்ளே எவரும் புகவில்லை" என்று என, உள்ளே சென்று தேடாமைக் குச் சான்று காட்டினான். 'குகை நுழைவாயிலின் முகப்பிலே புரு முட்டையிட்டிருந்து நம்மைக் கண்டதும் பறந்து ஒடு கின்றதே! ஆள் நுழைந்திருப்பின் இப்புரு முன்னமே பறந் தோடி இருக்காதா" என்று, ஆய்ந்துரைத்தான் வேறு ஒருவன், எனவே குகையினுள் யாருமே இல்லை என்று அறிவு ஆராய்ச்சியின் மூலம் முடிவு கட்டியவர்களாகத் தேடி வந் தோர் திரும்பிச் சென்றனர். ஒரு சிறு சிலந்தியையும், புறவை யும் கொண்டு, தங்களை இறைவன் காத்தருள் பாலித்தவிதம் உணர்ந்து, வியந்து இறைவனைப் போற்றினார்கள் நபிகள் நாயகம் அவர்களும், அவர்கள்தம் அருந்தோழரான அபூ பக்கர் சித்தீக் அவர்களும். நம்பினோர், நாசம் அடைவதில்லை என்ற நன்மொழி இங்கே வெற்றி பெற்றுத் திகழக் காண்கின் ருேம். இவ்வரிய நிகழ்ச்சியை, உமறுப் புலவர், அவருக்கே உரிய தன்மையில் அழகுறும் தமிழ்ப் பாக்களாக ஆக்கி அளித் திருப்பமை காண்போம்! பொருந்துதல் பயிலாக் காபிர் திசைதொறும் புகுந்து தேடிக் கருந்தடம் கொண்டல் செவ்விக் கவிகையில் உலகம் காத்து ரிந்ததீள் விளக்கம் செய்யும் வேதியர் இரசூலுல்லா இருந்தவான் உரைஞ்சி நின்ற இறும்பிடத்து அடைந்தார் அன்றே! கரத்தில் ஏந்திய வைவேலும் காலினைக் கபுசும் நீண்ட உரத்தினும முகத்தும் வேர்வை உதிர்ப்பொடும் காபிர் கூண்ட வரத்தினை இருகன் னார மள் அபூபக்கா நோக்கித்
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/136
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை